Category Archives: சாமுராய்

Oru Nadhi Song Lyrics in Tamil

ஒரு நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநித்யஸ்ரீ மகாதேவன் & துஷாராஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Oru Nadhi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…

BGM

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…

பெண் : ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…
அலிபாபா அலிபாபா…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…
ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…
அலிபாபா அலிபாபா…
அட உங்களில் யார் உண்டு…

BGM

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம்…
ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல்…

பெண் : பாராமல் போன பௌர்ணமி எல்லாம்…
பறித்து கொடுக்கும் ஒருவன்…
கேளாமல் போன பாடலை எல்லாம்…
திரட்டி கொடுக்கும் ஒருவன்…

பெண் : பாராமல் போன பௌர்ணமி எல்லாம்…
பறித்து கொடுக்கும் ஒருவன்…
கேளாமல் போன பாடலை எல்லாம்…
திரட்டி கொடுக்கும் ஒருவன்…

ஆண் : நான்தானா…
பெண் : நீ இல்லை…
ஆண் : நான்தானா… ஆ ஆ…
பெண் : நீ இல்லை…

பெண் : வான் மழையில் நனைத்த வானவில்லை…
என் மடியில் கட்டும் ஒருவன்…
என் தேக கதவு ஜன்னல் எல்லாம்…
திறந்து வைக்கும் ஒருவன்…

ஆண் : நான்தானா…
பெண் : நீ இல்லை…

பெண் : என் தேடல் அது வேறு…
அட போடா நீ இல்லை இல்லை…

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

BGM

பெண் : தீராமல் போன ஆசைகள் எல்லாம்…
தீர்க்க தெரிந்த ஒருவன்…
போகாத எல்லை போய் வந்தாலும்…
புன்னகை செய்யும் ஒருவன்…

குழு : புன்னகை செய்யும் ஒருவன்…

பெண் : ஆஹா… தீராமல் போன ஆசைகள் எல்லாம்…
தீர்க்க தெரிந்த ஒருவன்…
போகாத எல்லை போய் வந்தாலும்…
புன்னகை செய்யும் ஒருவன்…

பெண் : நீதானா…
ஆண் : நான் இல்லை…
பெண் : நீதானா…
ஆண் : நா நா நான் இல்லை…

பெண் : ஒரு கற்பு கண்ணிமை கர்மம் எல்லாம்…
கண்டு கொள்ளாத ஒருவன்…
நான் போதும் போதும் என்னும் வரையில்…
புதுமை செய்யும் ஒருவன்…

பெண் : நீதானா…
ஆண் : நான் இல்லை…

பெண் : நான் தேடும் சிங்காரன்…
இங்கு ஏனோ ஏன் இல்லை… இல்லை…

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு புதையல்…
குழு : புதையல்…
பெண் : ஒரு புவியல்…
குழு : புவியல்…
பெண் : மழை வாசல் என்னிடம் உண்டு…

பெண் : ஒரு புதையல்…
குழு : புதையல்…
பெண் : ஒரு புவியல்…
குழு : புவியல்…
பெண் : மழை வாசல் என்னிடம் உண்டு…

பெண் : அலிபாபா அலிபாபா…
அட உங்களில் யார் உண்டு…
குழு : எங்களில் யார் உண்டு…

BGM

குழு : ஒரு நதி ஒரு பௌர்ணமி…

BGM

குழு : ஒரு நதி ஒரு பௌர்ணமி…

BGM

குழு : ஒரு நதி…


Notes : Oru Nadhi Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒரு நதி பாடல் வரிகள்.


மூங்கில் காடுகளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & திப்புஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Moongil Kaadugale Song Lyrics in Tamil


ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து…
இப்படி வாழ இதயம் தொலைந்து…
சலித்து போனேன் மனிதனாய் இருந்து…
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து…
பறந்து பறந்து…

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : சேற்று தண்ணீரில்…
மலரும் சிவப்பு தாமரையில்…
சேறும் மணப்பதில்லை…
பூவின் ஜீவன் மணக்கிறது…

ஆண் : வேரை அறுத்தாலும்…
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை…
அறுத்த நதியின் மேல்…
மரங்கள் ஆனந்த பூசொறியும்…

ஆண் : தாமரை பூவாய் மாறேனோ…
ஜென்ம சாபல் எங்கே காணேனோ…
மரமாய் நானும் மாறேனோ…
என் மனித பிறவியில் உய்யேனோ… ஓஓ…

ஆண் : வெயிலோ முயலோ…
பருகும் வண்ணம்…
வெள்ளை பனி துளி ஆவேனோ…

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
ஓஹோ… தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : உப்பு கடலோடு…
மேகம் உற்பத்தி ஆனாலும்…
உப்பு தண்ணீரை…
மேகம் ஒரு போதும் சிந்தாது…

ஆண் : மலையில் விழுந்தாலும்…
சூரியன் மறித்து போவதில்லை…
நிலவுக்கு ஒளியூட்டி…
தன்னை நீட்டித்து கொள்கிறதே…

ஆண் : மேகமாய் நானும் மாறேனோ…
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ…
சூரியன் போலவே மாறேனோ…
என் ஜோதியில் உலகை ஆளேனோ…

ஆண் : ஜனனம் மரணம் அறியா வண்ணம்…
நானும் மழை துளி ஆவேனோ…

ஆண் : மூங்கில் காடுகளே…
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து…
இப்படி வாழ இதயம் தொலைந்து…
சலித்து போனேன் மனிதனாய் இருந்து…
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து…
பறந்து பறந்து…

BGM


Notes : Moongil Kaadugale Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. மூங்கில் காடுகளே பாடல் வரிகள்.


ஆகாய சூரியனை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திரா & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Aagaya Suriyanai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

BGM

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

பெண் : கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்…
என் எண்ணம் எதுவோ…
கிளிதான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்…
உன்னை கொஞ்சும் என்னமோ…

BGM

ஆண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

ஆண் : அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே சகியே…
உன் எண்ணம் என்னவோ…
என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே…
என்னை கொல்லும் என்னமோ…

BGM

பெண் : காதல் பந்தியில் நாமே உணவுதான்…
உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கேதான்…

ஆண் : காதல் பார்வையில் பூமி வேறுதான்…
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்…

பெண் : உன் குளிருக்கு இதமாய்…
என்னை அடிக்கடி கொளுத்து…

ஆண் : என் வெயிலுக்கு சுகம் தா…
உன் வேர்வையில் நனைத்து…

பெண் : காதல் மறந்தவன் காமம் கடந்தவன்…
துறவை துறந்ததும் சொர்கம் வந்தது…

ஆண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

BGM

ஆண் : என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்…
டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே…

பெண் : உன்னை நீங்கி நான் எங்கே செல்வது…
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே…

ஆண் : அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி…

பெண் : நீ கண்டு கண்டு பிடித்தால்…
பின் காமன் ஆட்சி…

ஆண் : கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்…
பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி…

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

ஆண் : அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே…
உன் எண்ணம் என்னவோ…
சகியே என்னைகொஞ்சம் கொஞ்சம் கொத்திதின்னும் கிளியே…
என்னை கொல்லும் என்னமோ…

BGM


Notes : Aagaya Suriyanai Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. ஆகாய சூரியனை பாடல் வரிகள்.