ஆகாய சூரியனை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திரா & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Aagaya Suriyanai Song Lyrics in Tamil

—BGM—

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

—BGM—

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

பெண் : கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்…
என் எண்ணம் எதுவோ…
கிளிதான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்…
உன்னை கொஞ்சும் என்னமோ…

—BGM—

ஆண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

ஆண் : அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே சகியே…
உன் எண்ணம் என்னவோ…
என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே…
என்னை கொல்லும் என்னமோ…

—BGM—

பெண் : காதல் பந்தியில் நாமே உணவுதான்…
உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கேதான்…

ஆண் : காதல் பார்வையில் பூமி வேறுதான்…
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்…

பெண் : உன் குளிருக்கு இதமாய்…
என்னை அடிக்கடி கொளுத்து…

ஆண் : என் வெயிலுக்கு சுகம் தா…
உன் வேர்வையில் நனைத்து…

பெண் : காதல் மறந்தவன் காமம் கடந்தவன்…
துறவை துறந்ததும் சொர்கம் வந்தது…

ஆண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

—BGM—

ஆண் : என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்…
டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே…

பெண் : உன்னை நீங்கி நான் எங்கே செல்வது…
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே…

ஆண் : அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி…

பெண் : நீ கண்டு கண்டு பிடித்தால்…
பின் காமன் ஆட்சி…

ஆண் : கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்…
பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி…

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

ஆண் : அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே…
உன் எண்ணம் என்னவோ…
சகியே என்னைகொஞ்சம் கொஞ்சம் கொத்திதின்னும் கிளியே…
என்னை கொல்லும் என்னமோ…

—BGM—

Notes : Aagaya Suriyanai Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. ஆகாய சூரியனை பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading