Category Archives: கங்கைக்கரை பாட்டு

கங்கைக்கரை பாட்டு – Gangai Karai Paattu (1995)

முத்து மனசுக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம்தேவாகங்கைக்கரை பாட்டு

Muthu Manasukule Song Lyrics in Tamil

BGM

ஆண் : முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா…
மயிலே மயிலே…
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா…
மயிலே மயிலே…

ஆண் : முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா…
மயிலே மயிலே…
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா…
மயிலே மயிலே…

ஆண் : அந்த ஆகாயம் இடம் மாறி போகாது…
இந்த பூபாளம் ஸ்வரம் மாறி பாடாது…
ஒரு மான உறங்க வைக்க தேனக் கொழைச்சு தெனம்…
நானே படிப்பேன் பாட்டு…

ஆண் : முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா…
மயிலே மயிலே…
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா…
மயிலே மயிலே…

BGM

ஆண் : பூத்து குலுங்கும் இந்த பொட்டு வச்ச வெண்ணிலவ…
பொத்தி பொத்தி பாத்திடுவேன்…
காத்து கமகமக்கும் கட்டழகு பெட்டகத்த…
கண்ணில் வச்சி காத்திடுவேன்…

ஆண் : பூத்து குலுங்கும் இந்த பொட்டு வச்ச வெண்ணிலவ…
பொத்தி பொத்தி பாத்திடுவேன்…
காத்து கமகமக்கும் கட்டழகு பெட்டகத்த…
கண்ணில் வச்சி காத்திடுவேன்…

ஆண் : அடி ஆத்தி சின்னப் பொண்ணு…
உன்ன அச்சடிச்சு கண்ணுக்குள்ளே வச்சேனம்மா…
அதுக்காக நெஞ்சுக்குள்ளே தெனம்…
அன்பு எனும் நூலெடுத்து தெச்சேனம்மா…

ஆண் : இது நானா படிக்கிற பாட்டு…
நீயா புரிஞ்சுக்க கேட்டு…
இது நானா படிக்கிற பாட்டு…
நீயா புரிஞ்சுக்க கேட்டு…

ஆண் : முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா…
மயிலே மயிலே…
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா…
மயிலே மயிலே…

BGM

ஆண் : ஆத்து மணலுக்குள்ளே அள்ளுகிற கையுக்குள்ளே…
ஊத்து சொறந்து வருமே…
சேத்து கொளத்திலுள்ள செம்பவள மொட்டு ஒண்ணு…
காட்டில் மலர்ந்து விடுமே…

ஆண் : ஆத்து மணலுக்குள்ளே அள்ளுகிற கையுக்குள்ளே…
ஊத்து சொறந்து வருமே…
சேத்து கொளத்திலுள்ள செம்பவள மொட்டு ஒண்ணு…
காட்டில் மலர்ந்து விடுமே…

ஆண் : ஒரு வார்த்தை சொல்லிப்புட்டேன்…
நான் ஒத்தையிலே மாலை ஒண்ணு பின்னிப்புட்டேன்…
மறுவார்த்தை சொல்லும் முன்னே…
உன்ன சொந்தமுன்னு பந்தமுன்னு எண்ணிப்புட்டேன்…

ஆண் : இது நானா படிக்கிற பாட்டு…
நீயா புரிஞ்சுக்க கேட்டு…
இது நானா படிக்கிற பாட்டு…
நீயா புரிஞ்சுக்க கேட்டு…

ஆண் : முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா…
மயிலே மயிலே…
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா…
மயிலே மயிலே…

ஆண் : அந்த ஆகாயம் இடம் மாறி போகாது…
இந்த பூபாளம் ஸ்வரம் மாறி பாடாது…
ஒரு மான உறங்க வைக்க தேனக் கொழைச்சு தெனம்…
நானே படிப்பேன் பாட்டு…

ஆண் : முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா…
மயிலே மயிலே…
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா…
மயிலே மயிலே…

Notes : Muthu Manasukule Song Lyrics in Tamil. This Song from Gangai Karai Paattu (1995). Song Lyrics penned by Kalidasan. முத்து மனசுக்குள்ளே பாடல் வரிகள்.