Category Archives: பரதன்

பரதன் – Bharathan (1992)

போட்டதெல்லாம் வெற்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாபரதன்

Pottathalem Song Lyrics in Tamil


BGM

குழு : ரப்பபாரா ரப் ரப்பபாரா ரப்பப்…
ரப்பபாரா ரப் ரப்பபாரா ரப்பப்…
ரரரரா ரரரரா…

BGM

ஆண் : போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு…
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே…
ஆஹா… போட்டி என்ன எட்டி நில்லு…
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே…

ஆண் : கொட்டு கொட்டு முரசு கொட்டிப் பாடு…
எட்டு திக்கும் கைகள் எட்டும் எட்டிப் பாரு…
துணிவுடன் இனி…

ஆண் : போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு…
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே…
ஆஹா… போட்டி என்ன எட்டி நில்லு…
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே…

BGM

ஆண் : பட்டுத் தேகம் தேக்குப் போல…
கட்டிக் காக்க திட்டம் போடு…
நோய்கள் தானாக ஓடும்…

ஆண் : வட்டில்லாத சிட்டுப் போல…
மெட்டுப் பாடி வட்டம் போடு…
காற்றும் பூ மாலை போடும்…

ஆண் : அச்சமென்ன அச்சமென்ன எட்டிப் போடு…
உண்மையுள்ள நெஞ்சுக்கேது கட்டுப்பாடு…

ஆண் : கங்கை போல உள்ளம் கொண்டு…
வெள்ளம் போல எங்கும் சென்று கரைகள் கடக்கலாம்…

ஆண் : போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு…
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே…
ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு…
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே…

ஆண் : கொட்டு கொட்டு முரசு கொட்டிப் பாடு…
எட்டு திக்கும் கைகள் எட்டும் எட்டிப் பாரு…
துணிவுடன் இனி…

ஆண் : போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு…
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே…
ஆஹா… போட்டி என்ன எட்டி நில்லு…
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே…

ஆண் : கிரிக்கட் ஆடு பேட்டை தூக்கி…
விக்கட் வாங்கு பந்தை வீசி…
வாடா நீயும் தான் பில்கேட்ஸ்…

ஆண் : பாப் சாங் பாடு பீட்டுப் போட்டு…
மைக்கேல் ஜாக்ஸன் ஆட்டம் போட்டு…
ஓடு பி டி உஷா போல்…

ஆண் : எந்த நாளும் எந்த ஏடும் உன்னைப் போற்றும்…
இந்த நாட்டின் மன்னன் என்று மாலை சூட்டும்…

ஆண் : சட்டம் போட்டும் திட்டம் போட்டு…
கோழை தன்னை வீரன் என்று ஆக்க முடியுமா…

ஆண் : போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு…
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே…
ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு…
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே…

ஆண் : கொட்டு கொட்டு முரசு கொட்டிப் பாடு…
எட்டு திக்கும் கைகள் எட்டும் எட்டிப் பாரு…
துணிவுடன் இனி…

ஆண் : போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு…
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே…
ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு…
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே…


Notes : Pottathalem Song Lyrics in Tamil. This Song from Bharathan (1992). Song Lyrics penned by Vaali. போட்டதெல்லாம் வெற்றி பாடல் வரிகள்.


புன்னகையில் மின்சாரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாபரதன்

Punnakaiyil Minsaram Song Lyrics in Tamil


ஆண் : புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்…
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க…

ஆண் : ஆஹா… கண்ணன் துணை ராதே ராதே…
கட்டிக் கொள்ளும் மாதே மாதே…
நெஞ்செல்லாம்… ஜிகுஜிகு ஜம்ஜம்…

ஆண் : புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

BGM

ஆண் : மந்திரத்தை நான் பாட…
அந்தரத்தில் நீயாட…
சொர்க்கந்தான் மிகப் பக்கந்தான்…

பெண் : முத்தளந்து நான் போட…
முக்கனியை நீ தேட…
மெல்லத்தான் இடை துள்ளத்தான்…

ஆண் : வெப்பங்களும் தாளாமல் தெப்பக்குளம் நீந்த…
செங்கமலம் தானாக என்னை நெருங்க…

பெண் : செங்கமலம் நோகாமல் அன்புக்கரம் ஏந்த…
சங்கமங்கள் தேனாகத் தித்திக்க…

ஆண் : இன்பக் கதை நீ பாதி நான் பாதி…
நாள்தோறும் சொல்லத்தான்…

பெண் : இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி…
ஊர்கோலம் செல்லத்தான் ஜிகுஜிகு ஜம்ஜம்…

ஆண் : பரப்பப்ப… புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்…
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க…

ஆண் : ஆஹா… கண்ணன் துணை ராதே ராதே…
கட்டிக் கொள்ளும் மாதே மாதே…
நெஞ்செல்லாம் ஜிகுஜிகு ஜம்ஜம்…

ஆண் : புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

BGM

பெண் : சொல்லியது மாளாது…
சொல்லிச் சொல்லித் தீராது…
நித்தந்தான் ஒரு பித்தந்தான்…

ஆண் : பொற்கலசம் மேலாட பைங்கொடியும் போராட…
அம்மம்மா துயர் என்னம்மா…

பெண் : வெண்ணிலவு போல் இந்தப் பெண்ணிலவு தேய…
வெட்கங்களைப் பார்க்காமல் கட்டித் தழுவு…

ஆண் : ஹா… பள்ளியறை ராஜாங்கம் என்னவென்றுதானே…
நள்ளிரவில் நீயாகச் சொல்லித்தா…

பெண் : சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டு…
தேன் பாட்டுக் கேட்கத்தான்…

ஆண் : சுகம் அள்ளித் தர எந்நாளும் வந்தாளே…
கண்ணே என் கண்ணம்மா… ஜிகுஜிகு ஜம்ஜம்…

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்…
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க…

ஆண் : தர ரத் ததத்தா தத்தத் தத்தா…
புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

ஆண் : கண்ணன் துணை ராதே ராதே…
கட்டிக் கொள்ளும் மாதே மாதே…
நெஞ்செல்லாம் ஜிகுஜிகு ஜம்ஜம்…

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்…
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க…

BGM


Notes : Punnakaiyil Minsaram Song Lyrics in Tamil. This Song from Bharathan (1992). Song Lyrics penned by Vaali. புன்னகையில் மின்சாரம் பாடல் வரிகள்.