புன்னகையில் மின்சாரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாபரதன்

Punnakaiyil Minsaram Song Lyrics in Tamil


ஆண் : புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்…
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க…

ஆண் : ஆஹா… கண்ணன் துணை ராதே ராதே…
கட்டிக் கொள்ளும் மாதே மாதே…
நெஞ்செல்லாம்… ஜிகுஜிகு ஜம்ஜம்…

ஆண் : புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

BGM

ஆண் : மந்திரத்தை நான் பாட…
அந்தரத்தில் நீயாட…
சொர்க்கந்தான் மிகப் பக்கந்தான்…

பெண் : முத்தளந்து நான் போட…
முக்கனியை நீ தேட…
மெல்லத்தான் இடை துள்ளத்தான்…

ஆண் : வெப்பங்களும் தாளாமல் தெப்பக்குளம் நீந்த…
செங்கமலம் தானாக என்னை நெருங்க…

பெண் : செங்கமலம் நோகாமல் அன்புக்கரம் ஏந்த…
சங்கமங்கள் தேனாகத் தித்திக்க…

ஆண் : இன்பக் கதை நீ பாதி நான் பாதி…
நாள்தோறும் சொல்லத்தான்…

பெண் : இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி…
ஊர்கோலம் செல்லத்தான் ஜிகுஜிகு ஜம்ஜம்…

ஆண் : பரப்பப்ப… புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்…
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க…

ஆண் : ஆஹா… கண்ணன் துணை ராதே ராதே…
கட்டிக் கொள்ளும் மாதே மாதே…
நெஞ்செல்லாம் ஜிகுஜிகு ஜம்ஜம்…

ஆண் : புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

BGM

பெண் : சொல்லியது மாளாது…
சொல்லிச் சொல்லித் தீராது…
நித்தந்தான் ஒரு பித்தந்தான்…

ஆண் : பொற்கலசம் மேலாட பைங்கொடியும் போராட…
அம்மம்மா துயர் என்னம்மா…

பெண் : வெண்ணிலவு போல் இந்தப் பெண்ணிலவு தேய…
வெட்கங்களைப் பார்க்காமல் கட்டித் தழுவு…

ஆண் : ஹா… பள்ளியறை ராஜாங்கம் என்னவென்றுதானே…
நள்ளிரவில் நீயாகச் சொல்லித்தா…

பெண் : சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டு…
தேன் பாட்டுக் கேட்கத்தான்…

ஆண் : சுகம் அள்ளித் தர எந்நாளும் வந்தாளே…
கண்ணே என் கண்ணம்மா… ஜிகுஜிகு ஜம்ஜம்…

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்…
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க…

ஆண் : தர ரத் ததத்தா தத்தத் தத்தா…
புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…

ஆண் : கண்ணன் துணை ராதே ராதே…
கட்டிக் கொள்ளும் மாதே மாதே…
நெஞ்செல்லாம் ஜிகுஜிகு ஜம்ஜம்…

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்…
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க…

BGM


Notes : Punnakaiyil Minsaram Song Lyrics in Tamil. This Song from Bharathan (1992). Song Lyrics penned by Vaali. புன்னகையில் மின்சாரம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top