Category Archives: நாடோடித் தென்றல்

சந்தன மார்பிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎஸ். ஜானகி & மனோஇளையராஜாநாடோடித் தென்றல்

Santhana Marbile Song Lyrics in Tamil


BGM

பெண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே…
குழு : ஓ மதி ஓ மதி…
பெண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே…
குழு : ஓ மதி ஓ மதி…

பெண் : நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி… ஓ…

ஆண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே…
குழு : ஓ மதி ஓ மதி…
ஆண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே…
குழு : ஓ மதி ஓ மதி…

BGM

ஆண் : பல உலகம் போகும் யாத்திரை…
நிழலுலகில் நேர்ந்ததே…

பெண் : கனவுலகில் விழுந்த ஓர் பிறை…
நினைவுழகில் விழுகுதே…

ஆண் : வேள்வி வேள்வி காமதேவனே…
தோல்வி தோல்வி காதல் போரிலே…
வேள்வி வேள்வி காமதேவனே…
தோல்வி தோல்வி காதல் போரிலே…

பெண் : நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி… ஓ…

ஆண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே…
குழு : ஓ மதி ஓ மதி…
பெண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே…
குழு : ஓ மதி ஓ மதி…

BGM

பெண் : அலையலையாய் காதல் சங்கொலி…
நாடு இரவில் முழங்குதே…

ஆண் : மணி மணியாய் நாத கிண்கிணி…
புது கவிதை பொழியுதே…

பெண் : வேதம் வேதம் காதல் வேதமே…
ஊது ஊது காம தேவனே…
வேதம் வேதம் காதல் வேதமே…
ஊது ஊது காம தேவனே…

ஆண் : நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி… ஓ…

பெண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே…
குழு : ஓ மதி ஓ மதி…
ஆண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே…
குழு : ஓ மதி ஓ மதி…

பெண் : நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி… ஓ…

ஆண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே…
குழு : ஓ மதி ஓ மதி…
பெண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே…
குழு : ஓ மதி ஓ மதி…


Notes : Santhana Marbile Song Lyrics in Tamil. This Song from Nadodi Thendral (1992). Song Lyrics penned by Ilaiyaraaja. சந்தன மார்பிலே பாடல் வரிகள்.


Maniyae Manikuyilae Song Lyrics in Tamil

மணியே மணிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎஸ். ஜானகி & மனோஇளையராஜாநாடோடித் தென்றல்

Maniyae Manikuyilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…
கொடியே கொடிமலரே…
கொடி இடையின் நடையழகே…

ஆண் : தொட்ட இடம் பூமணக்கும்…
துளிர்க்கரமோ தொட இனிக்கும்…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…

ஆண் : கொடியே கொடிமலரே…
கொடி இடையின் நடையழகே…

BGM

ஆண் : பொன்னில் வடித்த சிலையே…
பிரம்மன் படைத்தான் உனையே…
வண்ணமயில் போல வந்த பாவையே…

பெண் : எண்ண இனிக்கும் நிலையே…
இன்பம் கொடுக்கும் கலையே…
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே…

ஆண் : கண்ணிமையில் தூண்டிலிட்டு…
காதல்தனை தூண்டிவிட்டு…
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே…

பெண் : பெண்ணிவளை ஆதரித்து…
பேசித்தொட்டுக் காதலித்து…
இன்பம்கண்ட காரணத்தால் தூங்கலையே…

ஆண் : சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்…
கொடி இடையில் பாசம் வைத்தேன்…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…

ஆண் : கொடியே கொடிமலரே…
கொடி இடையின் நடையழகே…

பெண் : தொட்ட இடம் பூமணக்கும்…
துளிர்க்கரமோ தொட இனிக்கும்…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

BGM

பெண் : கண்ணிமைகளை வருத்தி…
கனவுகளைத் துரத்தி…
மென்மனதினால் முடித்த மூக்குத்தி…

ஆண் : என்னுயிரிலே ஒருத்தி…
கண்டபடி என்னை துரத்தி…
அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி…

பெண் : கோடிமணி ஓசைநெஞ்சில்…
கூடி வந்துதான் ஒலிக்க…
ஓடி வந்து கேட்கவரும் தேவதைகள்…

BGM

ஆண் : சூடமலர் மாலை கொண்டு…
தூபமிட்டு தூண்டிவிட்டு…
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்…

பெண் : அந்தி வரும் நேரமம்மா…
ஆசை விளக்கேற்றுதம்மா…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…

பெண் : தொட்ட இடம் பூமணக்கும்…
துளிர்க்கரமோ தொட இனிக்கும்…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
நானன நான நான நா…
ஓஹோ ஹோ ஓஓஓ…
நானன நான நான நா…


Notes : Maniyae Manikuyilae Song Lyrics in Tamil. This Song from Nadodi Thendral (1992). Song Lyrics penned by Ilaiyaraaja. மணியே மணிக்குயிலே பாடல் வரிகள்.