Category Archives: மருது பாண்டி

மருது பாண்டி

பொம்பள இல்லாம நீதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாமருது பாண்டி

Pombala Illama Song Lyrics in Tamil


பெண் : பொம்பள இல்லாம நீதான்…
இங்கு என்ன செய்ய முடியும் மாமா…
பொம்பள இல்லாம நீதான்…
இங்கு என்ன செய்ய முடியும் மாமா…

பெண் : சட்டை துவைக்கவும் போட்டு தேய்க்கவும்…
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்…
என்ன வேணும் எண்ணி பாரு மாமா…
கன்னிப் பொண்ணு வேணும் சொல்லிப்புட்டேன் ஆமா…

BGM

ஆண் : பொம்பள துணை எனக்கு வேணா…
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி…
பொம்பள துணை எனக்கு வேணா…
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி…

ஆண் : கெண்டக் காலையும் கொண்டப் பூவையும்…
கண்டு மயங்குற காள நானில்லை…
அடி எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
இல்ல எக்குத்தப்பா ஆகிப்போகும் வீணே…

BGM

பெண் : ஆடி ஓடி வேலை செஞ்சா…
காலு கையி நோகுமே…
அங்கே இங்கே நானும் தொட்டு…
கைய வச்சா தீருமே…

ஆண் : ஹேய்… தெம்பிருக்கு வேலை செய்ய…
ஒஞ்சதில்லை நானம்மா…
வந்து வந்து வம்பிழுக்கும்…
வேல இப்ப வீணம்மா…

பெண் : வெளக்கு ஏத்தவும் கொஞ்சம் கொறைக்கவும்…
வேணும் பொம்பள…

ஆண் : நானெடுத்து ஏத்தி வச்சா…
வெளக்கு என்ன எரியாதா…
ஏத்தி வச்ச என்னோட கைதான்…
எறக்கி வைக்க முடியாதா…

பெண் : அந்த கஷ்டம் ஆம்பளைக்கெதுக்கு…
அதுதான் பொம்பளைக்கு…

ஆண் : பொம்பள துணை எனக்கு வேணா…
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி…
பொம்பள துணை எனக்கு வேணா…
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி போடி…

BGM

ஆண் : பெண்ணாசையால் சாபம் வாங்கி…
போனானம்மா இந்திரன்…
பூமி மேலே ஆசை வச்சு…
தேஞ்சானம்மா சந்திரன்…

பெண் : எல்லோருக்கும் சாபம் தீர்க்க…
உள்ள இனம் பொம்பள…
உங்களுக்கு ஏதுமில்ல ஆனாலும் நீ ஆம்பள…

ஆண் : பருவக் கிறுக்குல பட்டப் பகலுல…
கனவில் மிதக்குற…

பெண் : மருதுபாண்டி பேரையும் சொல்ல…
மகனும் பொறக்க வேணாமா…
ஓ… மகன தாங்க அம்மா நான்தான்…
மனச கொஞ்சம் தா மாமா…

ஆண் : யம்மா யம்மா சொன்னது சரிதான்…
நாளொண்ணு பார்ப்போமா…

பெண் : பொம்பள இல்லாம நீதான்…
இங்கு என்ன செய்ய முடியும் மாமா…

ஆண் : பொம்பள இல்லாம யாரும்…
இங்கு என்ன செய்ய முடியும் வாம்மா…

பெண் : சட்டை துவைக்கவும் போட்டு தேய்க்கவும்…
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்…

ஆண் : பொண்ணு ஒண்ணு வேணுமடி மானே…
நீ சொன்னதெல்லாம் ஒத்துக்கிட்டேன் நானே…

பெண் : பொம்பள இல்லாம நீதான்…
இங்கு என்ன செய்ய முடியும் மாமா…


Notes : Pombala Illama Song Lyrics in Tamil. This Song from Maruthu Pandi (1990). Song Lyrics penned by Gangai Amaran. பொம்பள இல்லாம நீதான் பாடல் வரிகள்.


ஆதாமும் ஏவாளும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாமருது பாண்டி

Adhamum Yevalum Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக…
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக…

பெண் : ஆடைதான் பாரம் ஆகும்…
நீயும் நானும் சேரத்தான்…

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
ஆண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

BGM

பெண் : ஆகாயம் பூமிக்கென்றே ஆடை இங்கேது…
நிர்வாண கோலமென்றே ஊரும் கூறாது…

ஆண் : பாலாடை மூடிக் கொண்டால் ருசியும் பொங்காது…
பூ மீது ஆடையிட்டால் வசியம் பண்ணாது…

பெண் : நூலாடை நானாக மேலாடை நீயாக…
யார் இதை தடுப்பாரோ…

ஆண் : தீராதே தீராதே மோகந்தான் தீராதே…
பெண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்…
இன்றே கொஞ்சம் காண்போமே…

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
ஆண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

பெண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக…
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக…

ஆண் : ஆடைதான் பாரம் ஆகும்…
நீயும் நானும் சேரத்தான்…

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

BGM

ஆண் : கானங்கள் சொல்லி சொல்லி வானில் செல்வோமா…
குழு : வேண்டாமே…
ஆண் : வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிப் பார்ப்போமா…
குழு : வேண்டாமே…

பெண் : மேகத்தில் மெத்தையிட்டு மோகம் கொள்வோமா…
குழு : வேண்டாமே…
பெண் : மோகத்தில் முத்தம் சிந்தி தாகம் தீர்ப்போமா…
குழு : வேண்டாமே…

ஆண் : நாம் காணும் ஆனந்தம் கானல் நீர் ஆகாது…
என்றென்றும் மறையாது…

பெண் : வாராயோ வாராயோ…
தோள் மீது சேராயோ…

ஆண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்…
இன்றே கொஞ்சம் காண்போமே…

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக…
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக…

பெண் : ஆடைதான் பாரம் ஆகும்…
நீயும் நானும் சேரத்தான்…

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
ஆண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…


Notes : Adhamum Yevalum Song Lyrics in Tamil. This Song from Maruthu Pandi (1990). Song Lyrics penned by Piraisoodan. ஆதாமும் ஏவாளும் பாடல் வரிகள்.