Category Archives: பொங்கி வரும் காவேரி

பொங்கி வரும் காவேரி – Pongi Varum Kaveri (1989)

வெள்ளி கொலுசு மணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாபொங்கி வரும் காவேரி

Velli Golusu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…

ஆண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

ஆண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
கூடாம கூட வச்சு சேத்ததென்ன…

பெண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

BGM

பெண் : துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்…
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்…
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச…
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்…

ஆண் : பொன்னி நதிப்போல நானும் உன்ன…
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா…
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண…
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா…

பெண் : காத்து காத்து நானும்…
பூத்துப் பூத்துப் போனேன்…
சோ்ந்து பாடும்போது தேரில் ஏறலானேன்…

ஆண் : உன் பேரச்சொல்லி பாடி வச்ச…
ஊறுதம்மா தேனே…

பெண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…

ஆண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
ஆண் : கூடாம கூட வச்சு சேத்ததென்ன…

BGM

ஆண் : கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த…
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்…
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்…
வாங்கினது நல்ல வரம்தான்…

பெண் : கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்…
நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்…
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்…
சாவியத்தான் தொலச்சுபுட்டேன்

ஆண் : உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு…
மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு…

பெண் : காலமெல்லாம் கேட்டிடத்தான்…
காத்திருக்கேன் பாத்து…

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…

பெண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
கூடாம கூட வச்சு சேத்ததென்ன…

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…


Notes : Velli Golusu Song Lyrics in Tamil. This Song from Pongi Varum Kaveri (1989). Song Lyrics penned by Gangai Amaran. வெள்ளி கொலுசு மணி பாடல் வரிகள்.


தினமும் சிரிச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாபொங்கி வரும் காவேரி

Dhinamum Sirichi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…

ஆண் : ஏறெடுத்து பார்த்தா பார்வை வலை போட்டா…
மாட்டிகிட்டேன் நானும்…
அழகு பருவ சிலை கணக்கு புரியவில்லை…

ஆண் : தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…

BGM

ஆண் : மெத்தையில ஒத்துழைக்க அத்தை மக இல்லையே…
சொத்து சுகம் ஏதும் தேவை இல்லையே…
கற்பனையில் வாழ்ந்து வந்தேன் காய்ச்சல் தீர வில்லையே…
கண்டுகிட்டா தீரும் காதல் தொல்லையே…

ஆண் : ஸ்… குளிரும் ஏ.சி ரூமு…
அது எனக்கு கொதிக்கல் ஆச்சு…
நல்ல இடத்த நீயும் காட்டு…
இப்போ போதை ஏறி போச்சு…

ஆண் : நல்ல கொடி முல்லையே…
நாளும் உந்தன் தொல்லையே…
சொல்லி தீர வில்லையே…
அதுக்கு இடம் இருக்கு…
இதுக்கு தடை எதுக்கு…

ஆண் : தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணுமணி…

BGM

பெண் : ஏறெடுத்து பார்த்ததில்ல வேற ஒரு ஆளதான்…
ஆசைபட்டேன் உங்க கூட வாழதான்…
காத்திருந்து பாத்திருந்தேன் நீங்க வரும் நாளைதான்…
எப்ப வரும் கூர பட்டு சேலைதான்…

பெண் : மனச கெடுத்த ராசா…
நான் உனக்கு பூத்த ரோசா…
தவறு நடந்து போச்சு…
இப்போ தடையும் விலகி போச்சு…

பெண் : உங்க கிட்ட சேரதான் என் உயிரு உள்ளது…
காலம் இனி நல்லது…
மாலை போட ஒரு நாள பார்த்து சொல்லு…

ஆண் : தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…

பெண் : ஏறெடுத்து பார்த்தா பார்வை வலை போட்ட…
மாட்டிகிட்டேன் நானும்…

ஆண் : ஹேய்… அழகு பருவ சிலை கணக்கு புரிஞ்சதடி…

பெண் : தினமும் சிரிச்சி மயக்கி…
உன் மனச கெடுத்த சிறுக்கி…

ஆண் : கனவ தடுத்தி நிறுத்தி…
நீ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…


Notes : Dhinamum Sirichi Song Lyrics in Tamil. This Song from Pongi Varum Kaveri (1989). Song Lyrics penned by Gangai Amaran. தினமும் சிரிச்சி பாடல் வரிகள்.