வெள்ளி கொலுசு மணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாபொங்கி வரும் காவேரி

Velli Golusu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…

ஆண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

ஆண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
கூடாம கூட வச்சு சேத்ததென்ன…

பெண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

—BGM—

பெண் : துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்…
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்…
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச…
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்…

ஆண் : பொன்னி நதிப்போல நானும் உன்ன…
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா…
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண…
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா…

பெண் : காத்து காத்து நானும்…
பூத்துப் பூத்துப் போனேன்…
சோ்ந்து பாடும்போது தேரில் ஏறலானேன்…

ஆண் : உன் பேரச்சொல்லி பாடி வச்ச…
ஊறுதம்மா தேனே…

பெண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…

ஆண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
ஆண் : கூடாம கூட வச்சு சேத்ததென்ன…

—BGM—

ஆண் : கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த…
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்…
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்…
வாங்கினது நல்ல வரம்தான்…

பெண் : கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்…
நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்…
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்…
சாவியத்தான் தொலச்சுபுட்டேன்

ஆண் : உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு…
மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு…

பெண் : காலமெல்லாம் கேட்டிடத்தான்…
காத்திருக்கேன் பாத்து…

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…

பெண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
கூடாம கூட வச்சு சேத்ததென்ன…

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…


Notes : Velli Golusu Song Lyrics in Tamil. This Song from Pongi Varum Kaveri (1989). Song Lyrics penned by Gangai Amaran. வெள்ளி கொலுசு மணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading