Category Archives: ரோசாப்பூ ரவிக்கைக்காரி

என்னுள்ளில் எங்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்வாணி ஜெயராம்இளையராஜாரோசாப்பூ ரவிக்கைக்காரி

Ennullil Engo Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது…
ஆனால் அதுவும் ஆனந்தம்…

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது…

BGM

பெண் : என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க…
பங்கு வைக்க பொங்கிடும் பூம்புனலில்…

BGM

பெண் : பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின்…
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க…
காலம் இன்றே சேராதோ…

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது…

BGM

பெண் : மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே…
மோகங்களே மல்லிகை மாலைகளே…

BGM

பெண் : மல்லிகை முல்லையின் மாலைகளே…
மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே…
என்றும் என்னைக் கூடாயோ…

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது…
ஆனால் அதுவும் ஆனந்தம்…

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…


Notes : Ennullil Engo Song Lyrics in Tamil. This Song from Rosappu Ravikkaikari (1979). Song Lyrics penned by Gangai Amaran. என்னுள்ளில் எங்கோ பாடல் வரிகள்.


Vethala Vethala Song Lyrics in Tamil

வெத்தல வெத்தல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாரோசாப்பூ ரவிக்கைக்காரி

Vethala Vethala Song Lyrics in Tamil


ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ…

BGM

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ…
கொழுந்து வெத்தலையோ…
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ…

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ…
கொழுந்து வெத்தலையோ…
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ…

ஆண் : வண்டி சோலை செம்பட்ட நான்…
வித்து வாரேன் உன்கிட்டதான்…
ஏல சோத பயலே சோறா நடந்து வாடா முன்னால…
எட்டு வைச்சு வாட முன்னால…

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ…
கொழுந்து வெத்தலையோ…
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ…

BGM

ஆண் : கேட்டாங்க கேட்டாங்க என்னென்ன கேட்டாங்க…
பாட்டியும் ஏலக்கா வேணும்ன்னு கேட்டாங்க…
பத்தமடா பாயி வேணும்ன்னு கேட்டாங்க…

BGM

ஆண் : சின்ன கருப்பட்டி மூக்கு பொடி டப்பி…
வாங்கி வரும்படி கேட்டாங்க…

BGM

ஆண் : பொழு சாய ஊருக்கு…
பொழு சாய ஊருக்கு வீரசாக திரும்பணும்…
வெகு தூரம் நடக்கும் வேகமா வாடா…

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ…
கொழுந்து வெத்தலையோ…
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ…

BGM

ஆண் : சொன்னாங்க சொன்னாங்க தாத்தாவும் சொன்னாங்க…
சொன்னாங்க சொன்னாங்க தாத்தாவும் சொன்னாங்க…
பொண்டாட்டி கட்டிக்க வேணும்ன்னு சொன்னாங்க…
முனாடி கூட்டிகிட்டு வாடான்னு சொன்னாங்க…

ஆண் : கல்யாணம் செஞ்சு அன்னைக்கு ராத்திரி…
ஆசி வாங்கணும்னாங்க…
நெசமாக வருவேங்க…
நெசமாக வருவேங்க வயசான மனுஷங்க…
வாயார மனசார வாழ்த்தணும் நீங்க…

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ…
கொழுந்து வெத்தலையோ…
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ…

BGM

ஆண் : இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க…
இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க…
ஏழு தொழானுக்கு பாதமும் பிஸ்தாவும்…
மூணு தொழானுக்கு முந்திரி திராட்சியும்…
வாங்கிட்டு வாடா தின்னுட்டு போடா…
வந்திடும் உனக்கு வீரமும்னாங்க…
நான் திங்க போறேன்…
நான் திங்க போறேன் அப்புறம் பாரு…
நம்மூர் காளையா முட்டி பாக்க போறேன்…

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ…
கொழுந்து வெத்தலையோ…
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ…

ஆண் : வண்டி சோலை செம்பட்ட நான்…
வித்து வாரேன் உன்கிட்டதான்…
ஏல சோத பயலே சோறா நடந்து வாடா முன்னால…
எட்டு வைச்சு வாட முன்னால…


Notes : Vethala Vethala Song Lyrics in Tamil. This Song from Rosappu Ravikkaikari (1979). Song Lyrics penned by Gangai Amaran. வெத்தல வெத்தல பாடல் வரிகள்.


உச்சி வகுந்தெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். பி. சைலஜாஇளையராஜாரோசாப்பூ ரவிக்கைக்காரி

Uchi Vaguntheduthu Pichi Poo Song Lyrics in Tamil


BGM

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

பெண் : யே… ஆரிராரோ… ஆரிராரோ…
ஆரிராரிராரோ…
ஆரிராரோ… ஆரிராரோ…
ஆரிராரோ… ஆரிராரோ…

BGM

ஆண் : பாட்டுல மாடுகட்டி பால கறந்து வச்சா…
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க…
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல…
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துகல…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…

BGM

ஆண் : வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ…
கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க…
கட்டுக்கதை அத்தனையும் கட்டுக்கதை…
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துகல…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…

BGM

ஆண் : பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு…
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க…
செங்கரையான் தின்னிருக்க நியாமில்ல…
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…


Notes : Uchi Vaguntheduthu Pichi Poo Song Lyrics in Tamil. This Song from Rosappu Ravikkaikari (1979). Song Lyrics penned by Pulamaipithan. உச்சி வகுந்தெடுத்து பாடல் வரிகள்.


மாமன் ஒரு நாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். பி. சைலஜாஇளையராஜாரோசாப்பூ ரவிக்கைக்காரி

Maaman Oru Naal Malligapoo Song Lyrics in Tamil


BGM

பெண் : மாமன் ஒரு நாள்…
மல்லியப்பூ கொடுத்தான்…
என் மாமன் ஒரு நாள்…
மல்லியப்பூ கொடுத்தான்…

பெண் : அடி ஆத்தி இது எதுக்கு…
நான் யோசனப் பண்ணி பார்த்தேனம்மா…
அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா…

BGM

ஆண் : மாமன் ஒரு நாள்…
மல்லியப்பூ கொடுத்தான்…

பெண் : என் மாமன் ஒரு நாள்…
மல்லியப்பூ கொடுத்தான்…

ஆண் : அடி ஆத்தி இது எதுக்கு…
நான் யோசனப் பண்ணி பார்த்தேனம்மா…
அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா…

பெண் : என்னத்தச் சொன்னான்…
ஏது சொன்னான்…
சின்னபுள்ள நான்…
பச்சை புள்ளை நான்…
வாசத்திலே மதி மறந்து…
வாங்கிகிட்டேன் நான்…
வச்சிக்கிட்டேன் நான்…

ஆண் : மல்லியப்பூ வாசம்…
என் மாமன் மேல வீசும்…
மாமன் ஒரு நாள்…
மல்லியப்பூ கொடுத்தான்…

BGM

ஆண் : மாங்கா தோப்போரம்…
நான் மறுநா போனேனாம்…
தேங்கா பூவாட்டம்…
நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம்…

ஆண் : அடி ஆத்தாடி என்னோரமா…
என் மாமன் வந்தான் அங்கே…
பெண் : ஏ ஏ ஏ ஏ…

ஆண் : என் மாமன் வந்தான் அங்கே…
ஒரு மாங்கா தந்தான் திங்க…

பெண் : என்னத்தப் பண்ணான்…
ஏதுப் பண்ணான்…
சின்னப் பொண்ணு நான்…
பச்சப் பொண்ணு நான்…
ஆசையில என்னை மறந்து…
வாங்கிட்டேன் நான்…
தின்னுபுட்டேன் நான்…

ஆண் : மாமன் தந்த மாங்கா…
நல்ல மல்கோவாதாங்க…
மாமன் ஒரு நாள்…
மல்லியப்பூ கொடுத்தான்…

BGM

ஆண் : கம்மா கரையோரம்…
நான் குளிச்சிக் கிட்டிருந்தேனாம்…
சேலை துணி எல்லாம்…
நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனாம்…

ஆண் : அடி அம்மாடி என்னோரமா…
என் மாமன்தானே வந்தான்…
புது சேலைதானே தந்தான்…

பெண் : என்னத்தப் பண்ணான்…
ஏதுப் பண்ணான்…
சின்னப் பொண்ணு நான்…
பச்சப் பொண்ணு நான்…
சேலையிலே என்ன மறந்து…
வாங்கிக்கிட்டேன் நான்…
கட்டிக்கிட்டேன் நான்…

ஆண் : மாமன் தந்த சேலை…
அந்த மல்லியப்பூ போல…

பெண் : மாமன் ஒரு நாள்…
மல்லியப்பூ கொடுத்தான்…

BGM

ஆண் : ஒரு நா தனியாதான்…
நான் வீட்டில இருந்தேனாம்…
மெதுவா வந்தானாம்…
நான் வரவா என்றானாம்…

ஆண் : அடி ஆத்தாடி என்னோரமா…

பெண் : புது பாய போட்டான் அங்கே…
புது விதமா பாத்தான் இங்கே…

ஆண் : என்னத்தப் பண்ணான்…
ஏதுப் பண்ணான்…
சின்னப் பொண்ணு நான்…
பச்சப் பொண்ணு நான்…
ஒண்ணுமறியா கன்னி பொண்ணு நான்…
மதி மயங்கி படுத்துக்கிட்டேன்…

குழு : ஹஹஹஹஹா…


Notes : Maaman Oru Naal Malligapoo Song Lyrics in Tamil. This Song from Rosaappoo Ravikkaikaari (1979). Song Lyrics penned by Gangai Amaran. மாமன் ஒரு நாள் பாடல் வரிகள்.