Category Archives: திருமலை தென்குமரி

Guruvayoorappa Song Lyrics in Tamil

குருவாயூரப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பூவை செங்குட்டுவன்சீர்காழி கோவிந்தராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தென்குமரி

Guruvayoorappa Song Lyrics in Tamil


BGM

ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா…

BGM

ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா…
உன் கோவில் வாசலிலே…
தினமும் திருநாள் தானப்பா…
திருநாள் தானப்பா…

ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா…
உன் கோவில் வாசலிலே…
தினமும் திருநாள் தானப்பா…
திருநாள் தானப்பா…

ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா…

BGM

ஆண் : எங்கும் உந்தன் திருநாமம்…
எதிலும் நீயே ஆதாரம்…
எங்கும் உந்தன் திருநாமம்…
எதிலும் நீயே ஆதாரம்…

ஆண் : உன் சங்கின் ஒலியே சங்கீதம்…
சரணம் சரணம் உன் பாதம்…
உன் சங்கின் ஒலியே சங்கீதம்…
சரணம் சரணம் உன் பாதம்…

ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா…
உன் கோவில் வாசலிலே…
தினமும் திருநாள் தானப்பா…
திருநாள் தானப்பா…

ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா…

BGM

ஆண் : உலகம் என்னும் தேரினையே…
ஓடச் செய்யும் சாரதியே…
உலகம் என்னும் தேரினையே…
ஓடச் செய்யும் சாரதியே…

ஆண் : காலம் என்னும் சக்கரமே…
உன் கையில் சுழலும் அற்புதமே…
காலம் என்னும் சக்கரமே…
உன் கையில் சுழலும் அற்புதமே…

ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா…
உன் கோவில் வாசலிலே…
தினமும் திருநாள் தானப்பா…
திருநாள் தானப்பா…

ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா…

BGM


Notes : Guruvayoorappa Song Lyrics in Tamil. This Song from Thirumalai Thenkumari (1970). Song Lyrics penned by Poovai Senguttuvan. குருவாயூரப்பா பாடல் வரிகள்.


திருப்பதி மலை வாழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்சீர்காழி கோவிந்தராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தென்குமரி

Thirupathi Malai Vaazhum Song Lyrics in Tamil


ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…

BGM

ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா…
ஏழுமலை வாசா…

ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா…
ஏழுமலை வாசா…
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…

BGM

ஆண் : அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்…
அதில் ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்…
அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்…
அதில் ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்…

ஆண் : என் மனம் உருகிடவே பாடி வந்தேன்…
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்…
உன் ஏழுமலை ஏறி ஓடி வந்தேன்…
ஏழுமலை ஏறி ஓடி வந்தேன்…

ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா…
ஏழுமலை வாசா…
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…

BGM

ஆண் : நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா…
மறைத்ததைப் பறித்திடுவாய் கோவிந்தா…
நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா…
மறைத்ததைப் பறித்திடுவாய் கோவிந்தா…

ஆண் : உரைத்தது கீதை என்னும் தத்துவமே…
உரைத்தது கீதை என்னும் தத்துவமே…
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே…
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே…

ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா…
ஏழுமலை வாசா…
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…


Notes : Thirupathi Malai Vaazhum Song Lyrics in Tamil. This Song from Thirumalai Thenkumari (1970). Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. திருப்பதி மலை வாழும் பாடல் வரிகள்.