Category Archives: கல்யாணராமன்

Kadhal Vandhirichchu Song Lyrics in Tamil

காதல் வந்திருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாகல்யாணராமன்

Kadhal Vandhirichchu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆஹான் வந்திருச்சே…
ஆஹஹான் ஓடிவந்தேன்…

BGM

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…

BGM

ஆண் : கழுதையப் போல் உந்தன் நடையில…
அந்தக் காக்கைய போல் உந்தன் குரலில… ஆஹா… ஹாஆ…

ஆண் : கவிதையப் போல் உந்தன் நடையில…
பச்ச கிளியைப் போல் உந்தன் குரலிலே…
எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி…

BGM

ஆண் : எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி…
அடுத்தது என்ன மறந்து போச்சே…
ஹா… ஞாபகம் வந்திருச்சு…
ஜோடி நீ சின்ன ராணி…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…

BGM

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு…
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன…

BGM

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு…
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன…
சித்திரை சிறுக்கி சுத்துற பொறுக்கி…
ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே…

BGM

ஆண் : ஹான்… சித்திரை சிலையே…
சுத்துற நிலவே…
செங்கனி சுவையே…
சிற்றின்ப நதியே…
ஆஹா… வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடிவந்தேன்…

BGM

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே…
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே…

BGM

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே…
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே…
அன்னக்கிளியே பத்திரகாளி…
சிட்டுக் குருவி கவரிமானே…
வேகம் வந்திருச்சு…
வாடி நீ சின்ன ராணி…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…

BGM


Notes : Kadhal Vandhirichchu Song Lyrics in Tamil. This Song from Kalyanaraman (1979). Song Lyrics penned by Panchu Arunachalam. காதல் வந்திருச்சு பாடல் வரிகள்.


மலர்களில் ஆடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ்.பி. சைலஜாஇளையராஜாகல்யாணராமன்

Malargalil Song Lyrics in Tamil


BGM

பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…

BGM

பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…
பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு…

பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…

BGM

பெண் : பூ மரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை…
நெஞ்சுக்குள் தாளாடும்…

BGM

பெண் : பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்…
பொன்வண்டோ தேரோடும்…

பெண் : சொர்கத்தின் பக்கத்தை இங்கு நான் காண…
என்றென்றும் உன்னோடும் நாளும் நான் ஆட…
வந்தேனே தோழி நீயம்மா…

பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…

BGM

பெண் : நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம்…
எண்ணங்கள் போராடும்…

BGM

பெண் : நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்…
எங்கெங்கும் தேனோடும்…

பெண் : இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட…
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட…
பெண் மானே நாணம் ஏன் அம்மா…

பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…
பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு…

பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…

BGM


Notes : Malargalil Song Lyrics in Tamil. This Song from Kalyanaraman (1979). Song Lyrics penned by Panju Arunachalam. மலர்களில் ஆடும் பாடல் வரிகள்.