அழகு நிலா காயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Azhagu Nila Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிலு சிலுணு காத்து தாலாட்டுற வேளை…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

ஆண் : கண்ணான கண்ணுமணி கண்ணு உறங்கு…
பொன்னான காலம் ஒன்னு காத்து கெடக்கு…

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அழகு நிலா காயும்… ம்ம்ம்ம்…

—BGM—

ஆண் : ராப்பொழுது எப்பவும் இல்ல…
அதுக்கும் உள்ளது எல்லை…
வேளை வந்தா விடிஞ்சாகனும்…
பகல் வேளை வந்தால் விடுஞ்சாகனும்…

ஆண் : காயாத வெள்ளமும் இல்ல…
அதுக்கும் உள்ளது எல்லை…
கோடை வந்தா வடிஞ்சாகணும்… ம்ம்…
இங்கு கோடை வந்தா வடிஞ்சாகணும்… ம்ம்…

ஆண் : எந்நாளும் எதிர்நீச்சல் நீ போடணும்…
எதிர்காலம் நமக்கென்று நீ பாடணும்…
பொன்மானே கொல்லிமலை பூந்தேனே…
உன் கண்ணீர் எல்லாம் பன்னீர் ஆகுமே… ஏஏ…

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

—BGM—

ஆண் : வேர் வாழ ஊத்தணும் நீறு…
மரத்த வச்சவன் யாரு…
வாடாமலே அவன் பார்த்துப்பான்… ஆஆ…
வேர் வாடாமலே அவன் பார்த்துப்பான்… ஆஆ…

ஆண் : யாரால மண்ணுல வந்தோம்…
பொறந்து கண்ணு தொறந்தோம்…
பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்… ஆஆ…
நம்ம பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்… ஆஆ…

ஆண் : அவன் சொல்லி யாராச்சும் வரக்கூடுமே…
நாம் வேண்டும் நிழல் கூட தரக்கூடுமே…
என்னைப்போலே நம்பி இரு இனிமேலே… ஏ…
உன் துன்பம் எல்லாம் தூளாய் போகுமே…

—BGM—

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிலுசிலுணு காத்து தாலாட்டுற வேளே…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

ஆண் : கண்ணான கண்ணுமணி கண்ணு உறங்கு…
பொன்னான காலம் ஒன்னு காத்து கெடக்கு…

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அழகு நிலா காயும்…


Notes : Azhagu Nila Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. அழகு நிலா காயும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading