| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| டி. ராஜேந்தர் | எஸ். ஜானகி & கே. ஜே. யேசுதாஸ் | டி. ராஜேந்தர் | ஒரு தாயின் சபதம் |
Enathu Gaanam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…
பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும்…
பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ… ஓஓஹோ… ஓஓ…
பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…
—BGM—
பெண் : வேரினை இழந்த மரம் எங்கு வாழும்…
அவரையும் பிரிந்து நான் எங்கு வாழ்வேன்… ஓஹோ… ஓஹோஓ…
ஆண் : வேரினை இழந்தும் ஆலமரம்…
விழுதுகள் தாங்க வாழுமே
வேரினை இழந்தும் ஆலமரம்…
விழுதுகள் தாங்க வாழுமே…
விழுதென குழந்தைகள் இருப்பதை மறப்பதா…
பெண் : இதயத்தை இழந்த பின்னாலே…
தேகத்தைக் காக்க முடியாதே…
நீயே என் இதயம் இல்லையேல் இல்லை உதயம்…
ஆண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…
பிள்ளைகள் வாழ்வே என் கண்ணில் இருக்க…
கலங்காது நீயும் ஆளாக்க வேணும்… ஓஹோஓஓ…
—BGM—
பெண் : கண்ணாக உன்னை நான் மதிக்கின்றபோது…
பார்வையை துறந்து வாழ்வது ஏது… ஓஹோஓ…
ஆண் : கண்களை இழந்த குருடனும்…
கோலூன்றி உலகில் வாழ்கிறான்…
கண்களை இழந்த குருடனும்…
கோலூன்றி உலகில் வாழ்கிறான்…
நம்பிக்கை வைத்திடு நம் சந்ததி வளர்த்திடு…
பெண் : அம்மா நீயும் அழுவாதே…
உன்னை நான் காப்பேன் கலங்காதே…
துடுப்பாய் இருப்பேன் கரை நான் சேர்ப்பேன்…
பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…
ஆண் : மகனே நீ வளர மனம் போல வாழ்த்து…
உன் கையில் பொறுப்பு குடும்பத்தை காப்பாத்து… ஓஹோ… ஓஓ…
Notes : Enathu Gaanam Song Lyrics in Tamil. This Song from Oru Thayin Sabatham (1987). Song Lyrics penned by T. Rajendar. எனது கானம் பாடல் வரிகள்.
