| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | எஸ்.பி.பாலசுப்ரமணியம் | வித்யாசாகர் | அபியும் நானும் |
Azhagiya Azhagiya Kili Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
ஆண் : ஐயோ ஐயோ அநியாயம் அய்யய்யோ…
உயிர் போல் வளர்த்தேன்…
உன் உறவு பொய் அய்யய்யோ…
ஆண் : நூலானது இழையும் இழையும்…
தறி தானடி வலிகள் அறியும்…
அது போன்றது எனது நிலையும்…
ஆசை கண்ணே…
குழு : நச்சுதனி காலி ராத் ஹே…
அது நகு பறி பர்ஸாது ஹே…
தெறி ஜின்கடி ஹாத் ஹே…
அச்சு கையா சமஜூ ஹே…
ஆண் : அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
—BGM—
ஆண் : உயிரின் பிரிவு முழுசாய் மரணம்…
உறவின் பிரிவு பாதி மரணம்…
விதியின் பிடியில் நானே சரணம்…
ஞானம் பழக இதுவே தருணம்…
ஆண் : என் வாசனை வாசனை வாதையோ…
இன்று வானர சேனையிடம்…
அட காடுகள் கூடுகள் ஆகுமோ…
என் பைங்கிளி சேருமிடம்…
என் கண்ணாடி கை மாறி கல் சேருமோ…
ஆண் : நூலானது இழையும் இழையும்…
தறி தானடி வலிகள் அறியும்…
அது போன்றது எனது நிலையும்…
ஆசை கண்ணே…
குழு : நச்சுதனி காலி ராத் ஹே…
அது நகு பறி பர்ஸாது ஹே…
தெறி ஜின்கடி ஹாத் ஹே…
அச்சு கையா சமஜூ ஹே…
—BGM—
ஆண் : தாய் தான் அழுதால் கூடம் நனையும்…
தந்தை அழுதால் வீடே நனையும்…
ஆண் : ஊமை வழியில் உள்ளம் எரியும்…
பெண்ணை பெற்றால் உமக்கும் புரியும்…
ஆண் : நான் ஆசையில் சேமித்த புதையலை…
ஒரு அந்நியன் திருடுவதோ… ஆ…
எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை…
இன்று கிரகணம் தீண்டுவதோ…
இனி என் வாழ்வும் பெண் வாழ்வும் என்னாகுமோ…
ஆண் : மகள் என்பது முதலில் இனிமை…
மகள் என்பது பிரிவில் கொடுமை…
முடிவென்பது முதுமை தனிமை…
போய் வா பெண்ணே…
குழு : நச்சுதனி காலி ராத் ஹே…
அது நகு பறி பர்ஸாது ஹே…
தெறி ஜின்கடி ஹாத் ஹே…
அச்சு கையா சமஜூ ஹே…
Notes : Azhagiya Azhagiya Kili Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. அழகிய அழகிய பாடல் வரிகள்.


