மாகாளி ஸ்ரீகாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஅம்மன் பாடல்கள்

Maakali Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி…
தஞ்சமென்றுனைப் பணிந்தேன் இக்கணம் வாடி…

பெண் : ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி…
ஓடோடி வந்தேன் நான் உன்நிழல் தேடி…

பெண் : இருள்நிறம் கொண்டிருக்கும் கருநிறக் காளி…
அருள்எனும் ஒளியேற்றி மருள்நீக்க வாடி…

பெண் : விரிந்திருக்கும் விழியிரண்டும் சிவந்திருக்கும் காளி…
பரிந்தென்னைக் காத்திடவே விரைந்திங்கு வாடி…

பெண் : இடுகாட்டில் குடியிருக்கும் ஸ்ரீபத்ரகாளி…
கருங்காட்டில் அலைகின்றேன் வழிகாட்ட வாடி…

பெண் : தில்லையிலே நடனமிடும் திகம்பரக் காளி…
என்னிதய மேடையிலே பதம்பதிக்க வாடி…

பெண் : குருதியைக் குடித்தாடும் சாமுண்டி காளி…
குழைந்துன்னை அழைக்கின்றேன் மகிழ்ந்திங்கு வாடி…

பெண் : அலைபாயும் கூந்தலுடை ஆங்கார காளி…
ஆசையாய் அழைக்கின்றேன் அன்னையே வாடி…

பெண் : கழுத்தினிலே கபாலம் சூடிக்கொண்ட காளி…
கர்மவினை களைந்திடவே கருணைகொண்டு வாடி…

பெண் : திரிசூலம் ஏந்திக்கொண்டு சிவனுடனே ஆடி…
உன் திருவடிகள் சிந்தையிலே நிறுத்தும் வரம் தாடி…

பெண் : ஆடி ஆடி வருகுதம்மா…
ஆடித்தேர் வருகுதம்மா…

பெண் : தேடித் தேடி வந்து நின்றோம்…
தேவி உன்னைக் காண‌ வந்தோம்…

பெண் : வாடி வாடி அழுத முகம்…
வாட்டம் தீர வணங்கி நின்றோம்…

பெண் : ஓடி ஓடி களைத்து விட்டோம்…
உன் மடியில் சாய வந்தோம்…

பெண் : இடி இடியாய் வருவதெல்லாம்…
பொடிப்பொடியாய் ஆகக் கண்டோம்…

பெண் : இன்னல் என்று வந்ததெல்லாம்…
இன்னிசையாய் மாறக் கேட்டோம்…

—BGM—


Notes : Maakali Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. மாகாளி ஸ்ரீகாளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading