அய்யோ பத்திகிச்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Ayyo Pathikichu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு ஓஓ கண்ணே…

ஆண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு ஓஓ பெண்ணே…

பெண் : நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு…
சிக்கிகிச்சு ஓஓ கண்ணே…

—BGM—

ஆண் : ஹே… முள்ளை முள்ளால் எடுப்பது போல்…
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா…

ஆண் : ஹே… முள்ளை முள்ளால் எடுப்பது போல்…
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா…
உன் கண்ணோடு வாழ்கின்ற…
காதல் தீ வாழ்க…

பெண் : முள்ளை முள்ளால் எடுப்பது போல்…
நெருப்பை நெருப்பால் அணைப்போம்…
உன் கண்ணோடு வாழ்கின்ற…
காதல் தீ வாழ்க…

ஆண் : அய்யோ பத்திகிச்சு…

—BGM—

பெண் : ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல்…
ஒன்றோடு ஒன்று உரச…
பொறி வருமே வா வா…
ஹா ஹா ஹா…

ஆண் : ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான்…
ஆசையில் எரியும் சரிதான்…
அணைவதற்குள் வா வா…
வா வா வா வா வா வா வா…

பெண் : காதல் நெருப்பு உள்ளவரை…
காலம் உறைவதில்லை…
கதிரவனே வா வா…
காதலிப்போம் வா வா…

ஆண் : தீதான் முதல் விஞ்ஞானம்…
காதல்தான் முதல் மெய்ஞானம்…
தீ பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு பத்திகிச்சு…

—BGM—

ஆண் : தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும்…
காதல் எரிவது எதிலே…
விடை சொல்ல வா வா…
வா வா வா வா வா வா வா…

பெண் : ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி…
காதல் தன் சுடர் கொளுத்தும்…
ஒளி விடுவோம் வா ஆஹா…
வா ஆஹா ஆஆ…

ஆண் : காதல் நெருப்பை நீ வளர்த்து…
கவலைக் குப்பைகளைக் கொளுத்து…
சுடர் வளர்ப்போம் வா வா…
சுகம் வளர்ப்போம் வா வா வா…

பெண் : தீபம் போலே இருந்தவள் நான்…
தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்…
பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு பத்திகிச்சு…
அய்யோ அய்யோ அய்யோ…

—BGM—


Notes : Ayyo Pathikichu Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. அய்யோ பத்திகிச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading