அதான்டா இதான்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅருணாச்சலம்

Athanda Ithanda Song Lyrics in Tamil


BGM

குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ…
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ…

ஆண் : அதான்டா இதான்டா…
அருணாச்சலம் நான்தான்டா…
ஹே… அதான்டா இதான்டா…
அருணாச்சலம் நான்தான்டா…

ஆண் : அன்னை தமிழ் நாட்டுல…
நான் அனைவருக்கும் சொந்தம்டா…
அதான்டா இதான்டா…
அருணாச்சலம் நான்தான்டா…
அன்னை தமிழ் நாட்டுல…
நான் அனைவருக்கும் சொந்தம்டா…

ஆண் : ஆண்டவன் நடத்திடுவாண்டா…
குழு : ஹோய் ஹோய் ஹோய்…
ஆண் : அருணாச்சலம் நடத்திடுவாண்டா…
குழு : ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா…
ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா…

ஆண் : அதான்டா இதான்டா…
அருணாச்சலம் நான்தான்டா…
அன்னை தமிழ் நாட்டுல…
நான் அனைவருக்கும் சொந்தம்டா…

BGM

ஆண் : என் கண் இரடண்டையும் காப்பாத்தும்…
கண்ணிமையும் நீதான்…
என் தோள்களிலே முழு பலமாய்…
உள்ளவனும் நீதான்…

ஆண் : என் நெஞ்சில் வாழ்ந்து வரும்…
தைரியமும் நீதான்…
என் சொல்லில் குடியிருக்கும்…
சத்தியமும் நீதான்…

BGM

ஆண் : ஆ… இன்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான்…
என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான்…
எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்…
என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்…

குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ…
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ…

ஆண் : இளமையில் உழைப்பவன்…
முதுமையில் சிரிக்கிறான்…
இளமையில் படுத்தவன்…
முதுமையில் தவிக்கிறான்…

ஆண் : உனது ரத்தமும் எனது ரத்தமும்…
உறவு ரத்தமடா…
நீயும் நானும் நானும் நீயும்…
நிறத்தால் குணத்தால் ஒன்னடா… ஹாஹா…

ஆண் : அதான்டா இதான்டா…
அருணாச்சலம் நான்தான்டா…
அன்னை தமிழ் நாட்டுல…
நான் அனைவருக்கும் சொந்தம்டா…

BGM

ஆண் : தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு…
நீ தனித்தனியா கோவில் குளம் அலைவது எதுக்கு…
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து…
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து…

BGM

ஆண் : காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு…
காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு…
பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தா தான் மதிப்பு…
நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு…

குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ…
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ…

ஆண் : தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான்…
பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான்…
உன்னை விடவும் எனக்கு வேறு உறவு இல்லையடா…
என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா… ஹான்…

ஆண் : அதான்டா இதான்டா…
அருணாச்சலம் நான்தான்டா…
அன்னை தமிழ் நாட்டுல…
நான் அனைவருக்கும் சொந்தம்டா…

ஆண் : அதான்டா இதான்டா…
அருணாச்சலம் நான்தான்டா…
அன்னை தமிழ் நாட்டுல…
நான் அனைவருக்கும் சொந்தம்டா…

ஆண் : ஆண்டவன் நடத்திடுவாண்டா…
ஹோய் ஹோய் ஹோய்…
அருணாச்சலம் நடத்திடுவாண்டா…
ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா…
ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா…

ஆண் : அதான்டா இதான்டா…
அருணாச்சலம் நான் தான்டா…
அன்னை தமிழ் நாட்டுல…
நான் அனைவருக்கும் சொந்தம்டா…

ஆண் : அதான்டா இதான்டா…
அருணாச்சலம் நான் தான்டா…
அன்னை தமிழ் நாட்டுல…
நான் அனைவருக்கும் சொந்தம்டா…


Notes : Athanda Ithanda Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Vairamuthu. அதான்டா இதான்டா பாடல் வரிகள்.


Scroll to Top