அரும்பாகி மொட்டாகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்தீபன் சக்ரவர்த்தி & பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Arumbagi Mottagi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…

—BGM—

பெண் : ஜாதகத்த பாத்ததில்ல…
சாதகம்தான் வேலையெல்லாம்…
வேறெதையும் கேட்டதில்ல…
போட்டுவிடு மாலையெல்லாம்…

ஆண் : மணக்கும் சந்தனம் பூசட்டுமா…
இனிக்கும் சங்கதி பேசட்டுமா…

பெண் : எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா…
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா…

ஆண் : பொன் ஆவாரம்பூ என் காதோரமா…
ஸ்வரம் பாடும் இந்நேரம் பொன் நேரம்தான்…

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…

—BGM—

ஆண் : பாய் விரிச்சு நான் படுத்தா…
பால் எடுத்து வாடி புள்ள…
பல கதய பேசிப்புட்டா…
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள…

பெண் : பசிக்குப் பந்திய போடட்டுமா…
ரசிச்சு உன்கிட்ட கூடட்டுமா…

ஆண் : தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா…
புடிச்சுக் கையில சேக்கட்டுமா…

பெண் : எம் மச்சானுக்கு அட என்னாச்சுது…
அது பூவாயி பின்னால பித்தானது…

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…

பெண் : தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
ஆண் : கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…


Notes : Arumbagi Mottagi Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Na. Kamarasan. அரும்பாகி மொட்டாகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading