மாலைக் கருக்கலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Maala Karukkaliley Song Lyrics in Tamil


பெண் : நல்லாருக்குது ஊரு…
இது உண்டாக்கினது யாரு…
குழு : தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா…

பெண் : எல்லோருக்கும் ஒரு சாமி…
இது சாமி கொடுத்த பூமி…
குழு : தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா…

பெண் : வாரிக் கொடுக்கும் சாமி பேரு மாரி…
குழு : அட தான தந்தன தான தந்தன தானா…

பெண் : அவ பேர படிக்க ஊரு செழிக்கும் ஏரி…
குழு : அட தான தந்தன தான தந்தன தானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

ஆண் : சேலை உடுத்தன சோலை உனக்கொரு…
மாலை இருக்கு புள்ள…
ஓலை திருமண ஓலை கொடுத்திட…
வேளை வருதுப்புள்ள…

பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

BGM

ஆண் : நீயும் நானும் ஒண்ணு…
கேளு கேளு கண்ணு…
ராகம் தாளம் போல…
சேர போறோம் ஒண்ணு…

பெண் : சொந்தமிப்போ வந்ததில்லை…
சோகங்களே கண்டதில்லை…
சொக்கி மடியில நான் விழும்போதுல…
சொர்க்கம் இது போல் என்றுமில்லை…

ஆண் : கண்ணுல தூக்கமில்ல…
காரணம் கூறுபுள்ள…
நெஞ்சிலே நான் விழுந்தேன்…
எண்ணமோ மீளவில்லை…

பெண் : நேரம் முழுவதும் நெஞ்சிலிருப்பது…
நீதானே வேறில்ல…

ஆண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

BGM

பெண் : வேற ஜாதி முல்லை…
நானும் கன்னிபுள்ள…
பாதை மாறவில்ல…
பேதம் ஊருக்குள்ள…

ஆண் : ஆயிரம்தான் சொல்லட்டுமே…
வேலி ஒண்ணு கட்டட்டுமே…
அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது…
ஆசை இது போல் வாழட்டுமே…

பெண் : நெஞ்சிலே சாஞ்சிகிட்டா நிம்மதி தேறுமையா…
நித்தமும் உன் மடிதான் பொண்ணுக்கு போதுமய்யா…

ஆண் : நூறு தலைமுறை வாழும் வழிமுறை…
நாம் காப்போம் பூவாயி…

பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

ஆண் : சேலை உடுத்தன சோலை உனக்கொரு…
மாலை இருக்கு புள்ள…
ஓலை திருமண ஓலை கொடுத்திட…
வேளை வருதுப்புள்ள…

பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…

ஆண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…


Notes : Maala Karukkaliley Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. மாலைக் கருக்கலிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading