ஒரு சின்ன மணிக்குயிலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஜாலி ஆபிரகாம் & பவதாரிணிஇளையராஜாகட்டபஞ்சாயத்து

Oru Chinna Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம்…
அத மாத்திக் கொள்ளணுமாம்…
நல்ல நாள் குறிக்கணுமாம்…
அத நிச்சயம் செய்யணுமாம்…
அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…

பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

—BGM—

பெண் : கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல்…
உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா…
காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து…
உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா…

ஆண் : கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி…
கண்ணீர தொடச்சி அந்த சாமிதானே பொட்டழகி…
சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும்…
பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும்…

பெண் : சரியா தவறா அத நடத்திடும் தெய்வம்…
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…

ஆண் : சிறு சிந்து சுமந்து வந்த காற்றும் இனிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

—BGM—

ஆண் : பூவான பூவழகி பூப்போல தேர் வருமா…
சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா…
வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம்…
தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம்…

பெண் : முத்தான நிலவொளியில் அன்பு குடிசை போடலாம்…
காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம்…
இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே…
நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம்…

ஆண் : அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம்…
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…

பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம்…
அத மாத்திக் கொள்ளணுமாம்…
நல்ல நாள் குறிக்கணுமாம்…
அத நிச்சயம் செய்யணுமாம்…

பெண் : அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…

ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…


Notes : Oru Chinna Song Lyrics in Tamil. This Song from Katta panchayath (1996). Song Lyrics penned by Vaali. ஒரு சின்ன மணிக்குயிலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading