அருள் மழை பொழிவாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownநாகூர் இ.எம்.ஹனிஃபாUnknownஇஸ்லாமிய பக்தி பாடல்கள்

Arul Mazhai Pozhivaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…

ஆண் : அண்ணல்நபியை தந்தோனே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…

BGM

ஆண் : மகத்துவம் ஓங்கும் அர்ஷின் தலைவா…
மாண்பு மிகுந்தவன் நீயே…
மகத்துவம் ஓங்கும் அர்ஷின் தலைவா…
மாண்பு மிகுந்தவன் நீயே…

ஆண் : நிகரில்லாத தனியொன் நீயே…
நேர்மையாளனும் நீயே…
இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே…
எந்தன் முகம் பார்ப்பாயே…

ஆண் : அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…

ஆண் : அண்ணல்நபியை தந்தோனே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…

BGM

ஆண் : ஆகுக என்னும் குன் என்ற சொல்லால்…
அனைத்தையும் படைத்தவன் நீயே…
ஆகுக என்னும் குன் என்ற சொல்லால்…
அனைத்தையும் படைத்தவன் நீயே…

ஆண் : பாகுடன் குர் ஆன் வேதம் தந்த…
வாயமையாளனும் நீயே…
அனுதினம் உன்னை மறவாதிருக்கும்…
அனுதினம் உன்னை மறவாதிருக்கும்…
ஆற்றல் நீ தருவாயே…

ஆண் : அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…

ஆண் : அண்ணல்நபியை தந்தோனே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…

BGM

ஆண் : ஆதம் நபியின் பிழைதனைப் பொறுத்தே…
ஆதம் நபியின் பிழைதனைப் பொறுத்தே…
அன்பை பொழிந்தவன் நீயே…
ஆதம் நபியின் பிழைதனைப் பொறுத்தே…
அன்பை பொழிந்தவன் நீயே…

ஆண் : நீதி நபியாம் இப்ராஹீமை…
நெருப்பில் காத்தவன் நீயே…
நலம் பெற எங்கள் பாவங்கள் போக்கி…
நலம் பெற எங்கள் பாவங்கள் போக்கி…
நன்மை வாழ்வளிப்பாயே…

ஆண் : அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…

ஆண் : அண்ணல்நபியை தந்தோனே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…

BGM

ஆண் : பாவம் பொறுத்தே பண்புடன் நாளும்…
வாய்மை கஃபூரும் நீயே…
பாவம் பொறுத்தே பண்புடன் நாளும்…
வாய்மை கஃபூரும் நீயே…

ஆண் : மேவும் துன்பம் யாவும் நீக்கும்…
மேன்மை சபூரும் நீயே…
அரமுடன் எந்தன் கண்ணீர் துடைத்து…
அரமுடன் எந்தன் கண்ணீர் துடைத்து…
அடைக்கலம் நீ தருவாயே…

ஆண் : அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…

ஆண் : அண்ணல்நபியை தந்தோனே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…

BGM

ஆண் : எல்லாப் புகழும் உனக்கே சொந்தம்…
அல்லாஹ் ஏற்றுக்கொள்வாயே…
எல்லாப் புகழும் உனக்கே சொந்தம்…
அல்லாஹ் ஏற்றுக்கொள்வாயே…

ஆண் : நல்லார் நெஞ்சில் என்றும் வாழும்…
வல்லமையாளனும் நீயே…
பாங்குடன் எந்தன் துஆவை ஏற்று…
பாங்குடன் எந்தன் துஆவை ஏற்று…
பாவம் பொறுத்து அருள்வாயே…

ஆண் : அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…

ஆண் : அண்ணல்நபியை தந்தோனே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…


Notes :  Arul Mazhai Pozhivaai Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs . Song Lyrics penned by Unknown. அருள் மழை பொழிவாய் பாடல் வரிகள்.


Scroll to Top