லேடி லக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கார்த்திக்ராதன்மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலீஷெட்டி

Lady Luck Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொள்ளை கொள்ளை ஆசையேன் விதைத்தாய்…
கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய்…
கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு…
நானும் இங்கு வசித்தேன்…
ஏன் என்னை மீறி உன்னை நான் நினைத்தேன்…

ஆண் : கண் அசைக்கும் முன்னால்…
நீ வாழ்த்து ஒன்று சொன்னால்…
காற்று தேடி கால்கள் போகுதே…

ஆண் : நீ நெருங்கி வந்தால்…
என் கை குலுக்கி நின்றால்…
விட்டு விட்டு ரத்தம் பாயுதே…

ஆண் : நீ வந்த நேரம்…
ஊற்றைப்போல ஊறும் இந்த வாழ்க்கை…
உன் கைகள் தீண்ட…
வீரமாக மாறிப்போகும் இந்த யாக்கை…

ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே…

BGM

ஆண் : உன்னிடம் உன்னிடம் பக்கமாகிறேன்…
முதல் முறை வாழ்க்கையில் வெட்கம் காண்கிறேன்…
உன்னை நான் ரசித்ததும் கோலமாகிறேன்…
அதிய கனவிலே நானும் போகுகிறேன்…

ஆண் : சின்ன சில்மிஷங்கள் பார்க்கவே…
நெஞ்சம் காத்திருக்குதே…
உந்தன் பொம்மையாகி போகவே…
என் ஜீவன் இந்த மண்ணில் வந்ததே…

ஆண் : சீண்டினாய் மின்னலாய்…
வெண்ணிலா கண்ணிலா…
நீ என் நிலா என்பதா…
என் வாடிப் போன பூக்கிடங்கில்…
கோடி கோடி பூக்கள் கொட்டுதே…

ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே…

ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே…

ஆண் : கொள்ளை கொள்ளை ஆசை ஏன் விதைத்தாய்…
கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய்…
கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு…
நானும் இங்கு வசித்தேன்…
ஏன் என்னை மீறி உன்னை நான் நினைத்தேன்…


Notes : Lady Luck Song Lyrics in Tamil. This Song from Miss Shetty Mr Polishetty (2023). Song Lyrics penned by Vivek. லேடி லக்கு பாடல் வரிகள்.


Scroll to Top