யாதோ திசை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சரத் சந்தோஷ்ராதன்மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலீஷெட்டி

Yaadho Dhisai Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாதோ திசை நீயும் சேர தோதாகுதோ…
யாரோயென உன் முகங்கள் வேறாகுதோ…
நீ தேடிய மாயம் எல்லாம் கை சேர்ந்ததோ…
கைரேகையின் காட்டுக்குள்ளே அது வீழ்ந்ததோ…

ஆண் : நிலை மறைந்தாய் அலை அணிந்தாய்…
இன்னும் பேராட்டமா…
தினம் பிறழும் உன் நடைகள்…
உனை தாலாட்டுமா…

ஆண் : நிலை மறைந்தாய் அலை அணிந்தாய்…
இன்னும் பேராட்டமா…
தினம் பிறழும் உன் நடைகள்…
உனை தாலாட்டுமா…

ஆண் : அந்த சிறுகுயில் தரும் அழுகுரல்…
உன் திசைகளை காட்டாதோ…
சில நிழல்களை நீ கடந்த பின்…
புவி நிஜங்களை நீட்டாதோ…

ஆண் : எதையடி நீ அடைந்தாய்…
எதையடி நீ துறந்தாய்…
எதுவரை நீ கடந்தாய்…
உன் மனதினை அடைவாய்…

ஆண் : எதையடி நீ அடைந்தாய்…
எதையடி நீ துறந்தாய்…
எதுவரை நீ கடந்தாய்…
உன் மனதினை அடைவாய்…

BGM

ஆண் : பூ விழும் வழியென யாராடி சொன்னது…
தீ விழும் பாதைக்கு காலடி தந்தது…
நேற்றெல்லாம் காற்றிலே கோலமாய் சேந்தது…
நாளை உன் பிம்பமாய் கூடவே வந்தது…

ஆண் : யாரையோ நீக்கிட நீ இன்று கூண்டிலே…
வாழ்க்கையோ பாசமாய் போடுதே தூண்டிலை…
உன் மனம் பாரடி தீயினில் காந்தலே…
உன்னை நீ சேரடி ஓவிய பாடலே…

ஆண் : எதையடி நீ அடைந்தாய்…
எதையடி நீ துறந்தாய்…
எதையடி நீ கறந்தாய்…
உன் மனசினை அடைவாய்…

ஆண் : ஏதோ உன் பாதையோடு முட்கள் போடும்…
ஏதோ உன் கால்தடத்தில் உன்னால் ஓடும்…
நீ கொண்ட ஆசையெல்லாம் தூரம் போகும்…
பூ நெஞ்சில் நாடகத்தில் ஊமையாகும்…

ஆண் : இது நீயா இது நீயா…
இல்லை அடையாளமே…
இது நீயே மறையாத…
உன் புதுக்கோலமே…

ஆண் : இது நீயா இது நீயா…
இல்லை அடையாளமே…
இது நீயே மறையாத…
உன் புதுக்கோலமே…

ஆண் : நிஜமாகவே துணை சேர…
இனி வழிகள் கிடைக்காதே…
நிழல் போலவே உனை உணரவே…
ஒரு மாயம் நடக்காதோ…


Notes : Yaadho Dhisai Song Lyrics in Tamil. This Song from Miss Shetty Mr Polishetty (2023). Song Lyrics penned by Vivek. யாதோ திசை பாடல் வரிகள்.


Scroll to Top