அர்ஜுனரு வில்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சுக்விந்தர் சிங்வித்யாசாகர்கில்லி

Arjunar Villu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அர்ஜுனரு வில்லு…
அரிச்சந்திரன் சொல்லு…
இவனோட தில்லு பொய்க்காது…

—BGM—

ஆண் : எதிரியைக் கொல்லு…
இமயத்தை வெல்லு…
உனக்கொரு எல்லை கிடையாது…

—BGM—

ஆண் : யாரோ யாரிவனோ…
ஒரு நீரோ தீயோ யார் அறிவார்…
ஆளும் தேரிவனோ…
அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்…

—BGM—

ஆண் : அர்ஜுனரு வில்லு…
அரிச்சந்திரன் சொல்லு…

—BGM—

ஆண் : எதிரியைக் கொல்லு…
இமயத்தை வெல்லு…

—BGM—

ஆண் : அஞ்சுவது மடம்…
குழு : தக்க தின தா…
ஆண் : எஞ்சுவது திடம்…
குழு : தினாக்கு தா…
ஆண் : அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்…

ஆண் : வெட்டிவிடு வினை…
குழு : தக்க தின தா…
ஆண் : ஏத்தி விடு உனை…
குழு : தினாக்கு தா…
ஆண் : உன்னுடைய துணையே முந்தானை…

குழு : இவன் ஒரு அதிசய புலி…
இவன் இருவது நகம் அது உழி…
அதை அறிந்திடும் பகைவனின் வழி…

—BGM—

குழு : தனி ஒரு மனிதனின் படை…
அதில் எழுவது இருப்பது விடை…
அது மழை வெயில் இரண்டுக்கும் குடை…

—BGM—

ஆண் : ஏறு முன்னேறு…
இது கரையே இல்லா காட்டாறு…
ஓடு முன்னோடு…
ஒரு வெற்றி என்பது கண் கூடு…

—BGM—

ஆண் : அர்ஜுனரு வில்லு…
அரிச்சந்திரன் சொல்லு…

—BGM—

ஆண் : எதிரியைக் கொல்லு…
இமயத்தை வெல்லு…

—BGM—

ஆண் : தேவதையின் ரகம்…
குழு : தக்க தின தா…
ஆண் : வெண்ணிலவு முகம்…
குழு : தினாக்கு தா…
ஆண் : மூடியது ஏனோ கார்மேகம்…

ஆண் : தேடல் ஒரு கண்ணில்…
குழு : தக்க தின தா…
ஆண் : ஊடல் ஒரு கண்ணில்…
குழு : தினாக்கு தா…
ஆண் : நாளை இரு கண்கள் சுகமாகும்…

குழு : அழகிய தாய் மொழி இவள்…
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்…
அட இவளுக்கு இவளே நகல்…

—BGM—

குழு : அழகிய மெழுகென உடல்…
உன் விழியினில் எதற்கடி கடல்…
அதை துடைப்பது இவனது விரல்…

—BGM—

ஆண் : ஏறு முன்னேறு…
இது கரையே இல்லா காட்டாறு…
ஓடு முன்னோடு…
ஒரு வெற்றி என்பது கண் கூடு…

—BGM—

ஆண் : அர்ஜுனரு வில்லு…
அரிச்சந்திரன் சொல்லு…

—BGM—

ஆண் : எதிரியைக் கொல்லு…
இமயத்தை வெல்லு…

—BGM—


Notes : Arjunar Villu Song Lyrics in Tamil. This Song from Ghilli (2004). Song Lyrics penned by Kabilan. அர்ஜுனரு வில்லு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading