அப்படி போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அனுராதா ஸ்ரீராம் & கே கேவித்யாசாகர்கில்லி

Appadi Podu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹோய்… அப்புடி போடு போடு போடு…
அசத்தி போடு கண்ணாலே…
இப்புடி போடு போடு போடு…
இழுத்து போடு கையாலே…

பெண் : ஒன்னோட ஊரு சுத்த…
உப்பு மூட்ட ஏறிக்கிறேன்…
ஒன்னோட கண்ண பொத்தி…
கண்ணாமூச்சி ஆட வரேன்…

பெண் : இந்த நடை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
இந்த நடை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
ஏ… இந்த நடை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…

—BGM—

ஆண் : அப்புடி போடு போடு போடு…
அசத்தி போடு கண்ணாலே…
இப்புடி போடு போடு போடு…
இழுத்து போடு கையாலே…

—BGM—

பெண் : என் மனசில நீ நினைக்கிறியே…
ஏ… அழகா என் கனவில நீ முழிக்கிறியே…
ஏ… அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே…
இது நிஜம்தானா…

ஆண் : என் உசுருல நீ துடிக்கிறியே…
ஏ… அழகி என் வயசுல நீ படுத்திறியே…
ஏ… மெதுவா என் கழுத்துல நீ மணக்கிறியே…
இது அதுதானா…

பெண் : உன்ன பாத்த சந்தோஷத்தில்…
ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்…
உன்ன தொட்ட அச்சத்தில…
மூணு தடதான் வேர்த்திருந்தேன்…

ஆண் : உன்னோட கன்னங்களை…
காக்கா கடி நான் கடிக்க…
என்னோட காது பக்கம்…
செல்ல கடி நீ கடிக்க…

ஆண் : இந்த வயசு போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
இந்த வயசு போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
இந்த வயசு போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…

பெண் : ஹேய்… அப்புடி போடு போடு போடு…
அசத்தி போடு கண்ணாலே…
இப்புடி போடு போடு போடு…
இழுத்து போடு கையாலே…

—BGM—

ஆண் : திக்க வைக்கிற திணற வைக்கிறியே…
நீ மெதுவா…
விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே…
நீ என்னதான்…
வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே…
இது சரிதானா…

பெண் : சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே…
நீ ஜோரா…
சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே…
நீ அழகா…
பத்த வைக்கிற பதற வைக்கிறியே…
இது முறைதானா…

ஆண் : ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள…
ஊசி நூலும் கோர்க்குதடி…
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்…
பத்து நிலவு தெறிக்குதடி…

பெண் : தை தைன்னு ஆடிகிட்டு…
உன்னோடு நானும் வரேன்…
நை நைன்னு பேசிகிட்டு…
உன் கூட சேர்ந்து வரேன்…

பெண் : இந்த ஆட்டம் போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
இந்த ஆட்டம் போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
இந்த ஆட்டம் போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…

ஆண் : ஹோய்… அப்புடி போடு போடு போடு…
அசத்தி போடு கண்ணாலே…
இப்புடி போடு போடு போடு…
இழுத்து போடு கையாலே…

பெண் : ஒன்னோட ஊரு சுத்த…
உப்பு மூட்ட ஏறிக்கிறேன்…
ஒன்னோட கண்ண பொத்தி…
கண்ணாமூச்சி ஆட வரேன்…

பெண் : இந்த நடை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
இந்த நடை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
ஏ… இந்த நடை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…


Notes : Appadi Podu Song Lyrics in Tamil. This Song from Ghilli (2004). Song Lyrics penned by Pa. Vijay. அப்படி போடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading