குளிருது குளிருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Kulirudhu Kulirudhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…

ஆண் : கடலிலே தீ பிடித்தால்…
மீன்களின் கனவுகள் கலைவதில்லை…
ஊர்களில் தீ பிடித்தால்…
காதலில் உறவுகள் எரிவதில்லை…

ஆண் & பெண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது
காதல் உறவாடி…

பெண் : நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…

—BGM—

பெண் : இதயத்தில் வலி ஒன்று வருது…
உன் இமைகளின் முடி கொண்டு தடவு…

பெண் : நெஞ்சுக்குள்ளே எரியுது நெருப்பு…
இத நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு…

ஆண் : இது தண்ணீர் ஊற்றியா தீரும்…
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்…

பெண் : தேகங்கள் பரிமாற…
நம் உள்ளங்கள் இடம் மாறும்…

ஆண் : பேரின்ப பூஜைகளே…
உன் பெண்மைக்கு பரிகாரம்…

பெண் : மழை இல்லாமலும்…
தென்றல் சொல்லாமலும்…

ஆண் & பெண் : நம் நெஞ்சுக்குள் இப்போது…
லட்சம் பூ மலரும்…

ஆண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…

—BGM—

ஆண் : நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்…
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்…

பெண் : முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா…
அட முத்தமிட வேறு இடம் இல்லையா…

ஆண் : மழைத் துளி மழை துளி தொல்லையா…
அட அடை மழை தாங்க எண்ணம் இல்லையா…

பெண் : சுற்றி எல்லாம் எரிகிற போது…
நாம் இன்பம் கொள்வது ஏது…

ஆண் : அடி பூகம்ப வேலையிலும்…
இரு வான்கோழி கலவி கொள்ளும்…

பெண் : தேகத்தை அணைத்து விடு…
சுடும் தீ கூட அணைந்துவிடும்…
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்…

ஆண் : சுற்றி நின்றாலும் தீவண்ணம்…
அணைவது தின்னம்…

ஆண் & பெண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…

ஆண் : கடலிலே தீ பிடித்தால்…
மீன்களின் கனவுகள் கலைவதில்லை…
ஊர்களில் தீ பிடித்தால்…
காதலில் உறவுகள் எரிவதில்லை…

—BGM—


Notes : Kulirudhu Kulirudhu Song Lyrics in Tamil . This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. குளிருது குளிருது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading