அரைச்ச சந்தனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசின்ன தம்பி

Arachcha Santhanam Song Lyrics in Tamil


—BGM—

குழு : செம்பவழ முத்துக்கள…
சேர்த்து வச்ச சித்திரமே…
தங்க வளை வைர வளை…
போட்டிருக்கும் முத்தினமே…

குழு : வாய் திறந்து நீ சிரிச்சா…
பாத்திருக்கும் அத்தனையும்…
நீ வளர்ந்துப் பார்த்திருந்தா…
தோத்து விடும் இத்தனையும்…

—BGM—

ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்…
அழகு நெத்தியிலே…
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்…
சிரிக்கும் பந்தலிலே…

ஆண் : முழு சந்திரன் வந்தது போல்…
ஒரு சுந்தரி வந்ததென்ன…
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்…
பல மாயங்கள் தந்ததென்ன…
இது பூவோ பூந்தேனோ…

ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்…
அழகு நெத்தியிலே…
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்…
சிரிக்கும் பந்தலிலே…

—BGM—

ஆண் : பூவடி அவ பொன்னடி…
அதை தேடிப் போகும் தேனீ…
தேனடி அந்த திருவடி…
அவ தேவலோக ராணி…

ஆண் : தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ…
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ…

ஆண் : ரத்தினம் கட்டின பூந்தேரு…
உங்களைப் படைச்சதாரு…
என்னைக்கும் வயசு மூவாறு…
என் சொல்லு பலிக்கும் பாரு…
இது பூவோ பூந்தேனோ…

ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்…
அழகு நெத்தியிலே…
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்…
சிரிக்கும் பந்தலிலே…

ஆண் : முழு சந்திரன் வந்தது போல்…
ஒரு சுந்தரி வந்ததென்ன…
ஒரு மந்திரம் செஞ்சதப் போல்…
பல மாயங்கள் தந்ததென்ன…
இது பூவோ பூந்தேனோ…

ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்…
அழகு நெத்தியிலே…
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்…
சிரிக்கும் பந்தலிலே…

—BGM—

ஆண் : மான்விழி ஒரு தேன்மொழி…
நல்ல மகிழம்பூவு அதரம்…
பூநிறம் அவ பொன்னிறம்…
அவ சிரிக்க நினைப்பு சிதறும்…

ஆண் : ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்…
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்…

ஆண் : மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு…
சித்திரம் பெண்ணென ஆச்சு…
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு…
கைகளைத் தட்டுங்க கேட்டு…
இது பூவோ பூந்தேனோ…

ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்…
அழகு நெத்தியிலே…
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்…
சிரிக்கும் பந்தலிலே…

ஆண் : முழு சந்திரன் வந்தது போல்…
ஒரு சுந்தரி வந்ததென்ன…
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்…
பல மாயங்கள் தந்ததென்ன…
இது பூவோ பூந்தேனோ…

ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்…
அழகு நெத்தியிலே…
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்…
சிரிக்கும் பந்தலிலே…


Notes : Arachcha Santhanam Song Lyrics in Tamil. This Song from Chinna Thambi (1991). Song Lyrics penned by Gangai Amaran. அரைச்ச சந்தனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading