பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | இளையராஜா | சின்ன தம்பி |
Poovoma Oorgolam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : போவோமா ஊர்கோலம்…
பூலோகம் எங்கெங்கும்…
ஓடும் பொன்னி ஆறும்…
பாடும் கானம் நூறும்…
பெண் : காலம் யாவும் பேரின்பம்…
காணும் நேரம் ஆனந்தம்…
போவோமா ஊர்கோலம்…
பூலோகம் எங்கெங்கும்…
—BGM—
ஆண் : அரண்மனை அன்னக்கிளி…
தரையில நடப்பது…
நடக்குமா அடுக்குமா…
பெண் : பனியிலும் வெட்டவெளி…
வெயிலிலும் உள்ள சுகம்…
அரண்மனை கொடுக்குமா…
ஆண் : குளுகுளு அறையில…
கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது…
குடிசைய விரும்புமா…
பெண் : சிலுசிலு சிலுவென…
இங்கிருக்கும் காத்து…
அங்க அடிக்குமா கிடைக்குமா…
ஆண் : பளிங்கு போல உன் வீடு…
வழியில பள்ளம் மேடு…
பெண் : வரப்பு மேடு வயலோடும்…
பறந்து போவேன் பாரு…
ஆண் : அதிசயமான பெண்தானே…
பெண் : புதுசுகம் தேடி வந்தேனே…
ஆண் : போவோமா ஊர்கோலம்…
பூலோகம் எங்கெங்கும்…
ஓடும் பொன்னி ஆறும்…
பாடும் கானம் நூறும்…
ஆண் : காலம் யாவும் பேரின்பம்…
காணும் நேரம் ஆனந்தம்…
போவோமா ஊர்கோலம்…
பூலோகம் எங்கெங்கும்…
—BGM—
பெண் : கொட்டுகிற அருவியும்…
மெட்டுக்கட்டும் குருவியும்…
அடடடா அதிசயம்…
ஆண் : கற்பனையில் மிதக்குது…
கண்டதையும் ரசிக்குது…
இதிலென்ன ஒரு சுகம்…
பெண் : ரத்தினங்கள் தெறிக்குது…
முத்துமணி ஜொலிக்குது…
நடந்திடும் நதியிலே…
ஆண் : உச்சந்தல சொழலுது…
உள்ளுக்குள்ள மயங்குது…
எனக்கொன்னும் புரியல…
பெண் : கவிதை பாடும் காவேரி…
ஜதிய சேர்த்து ஆடும்…
ஆண் : அணைகள் நூறு போட்டாலும்…
அடங்கிடாமல் ஓடும்…
பெண் : போதும் போதும் உம் பாட்டு…
ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு…
பெண் : போவோமா ஊர்கோலம்…
பூலோகம் எங்கெங்கும்…
ஆண் : ஓடும் பொன்னி ஆறும்…
பாடும் கானம் நூறும்…
பெண் : காலம் யாவும் பேரின்பம்…
காணும் நேரம் ஆனந்தம்…
ஆண் : போவோமா ஊர்கோலம்…
பெண் : பூலோகம் எங்கெங்கும்…
Notes : Poovoma Oorgolam Song Lyrics in Tamil. This Song from Chinna Thambi (1991). Song Lyrics penned by Vaali. போவோமா ஊர்கோலம் பாடல் வரிகள்.