தூளியிலே ஆட வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாசின்ன தம்பி

Thooliyile Ada Vantha Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூளியிலே ஆட வந்த…
வானத்து மின்விளக்கே…
ஆழியிலே கண்டெடுத்த…
அற்புத ஆணிமுத்தே…

ஆண் : தொட்டில் மேலே முத்து மாலை…
வண்ண பூவா விளையாட…
சின்னத் தம்பி எசபாட…

ஆண் : தூளியிலே ஆட வந்த…
வானத்து மின்விளக்கே…
ஆழியிலே கண்டெடுத்த…
அற்புத ஆணிமுத்தே…

BGM

ஆண் : பாட்டெடுத்து நான் படிச்சா…
காட்டருவி கண்ணுறங்கும்…
பட்டமரம் பூமலரும்…
பாறையிலும் நீர்சுரக்கும்…

ஆண் : பாட்டெடுத்து நான் படிச்சா…
காட்டருவி கண்ணுறங்கும்…
பட்டமரம் பூமலரும்…
பாறையிலும் நீர்சுரக்கும்…

ஆண் : ராகமென்ன தாளமென்ன…
அறிஞ்சா நான் படிச்சேன்…
ஏழு கட்ட எட்டுக் கட்ட…
தெரிஞ்சா நான் படிச்சேன்…

ஆண் : நான் படிச்ச ஞானமெல்லாம்…
யார் கொடுத்தா சாமிதான்…
ஏடெடுத்துப் படிச்சதில்ல…
சாட்சியிந்த பூமிதான்…

ஆண் : தொட்டில் மேலே முத்து மாலை…
வண்ண பூவா விளையாட…
சின்னத் தம்பி எசபாட…

BGM

ஆண் : சோறுபோடத் தாயிருக்க…
பட்டினியப் பார்த்ததில்ல…
தாயிருக்கும் காரணத்தால்…
கோயிலுக்குப் போனதில்ல…

ஆண் : சோறுபோடத் தாயிருக்க…
பட்டினியப் பார்த்ததில்ல…
தாயிருக்கும் காரணத்தால்…
கோயிலுக்குப் போனதில்ல…

ஆண் : தாயடிச்சு வலிச்சதில்ல…
இருந்தும் நான் அழுவேன்…
நான் அழுதா தாங்கிடுமா…
உடனே தாய் அழுவா…

ஆண் : ஆகமொத்தம் தாய் மனசு…
போல் நடக்கும் பிள்ளைதான்…
வாழுகிற வாழ்க்கையிலே…
தோல்விகளே இல்லைதான்…

ஆண் : தொட்டில் மேலே முத்து மாலை…
வண்ண பூவா விளையாட…
சின்னத் தம்பி எசபாட…

ஆண் : தூளியிலே ஆடவந்த…
வானத்து மின்விளக்கே…
ஆழியிலே கண்டெடுத்த…
அற்புத ஆணிமுத்தே…

ஆண் : தொட்டில் மேலே முத்து மாலை…
வண்ண பூவா விளையாட…
சின்னத் தம்பி எசபாட…
வண்ண பூவா விளையாட…
சின்னத் தம்பி எசபாட…


Notes : Thooliyile Ada Vantha Song Lyrics in Tamil. This Song from Chinna Thambi (1991). Song Lyrics penned by Vaali. தூளியிலே ஆட வந்த பாடல் வரிகள்.


Scroll to Top