ஆப்பிள் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்ரோஜா கூட்டம்

Apple Penne Neeyaaro Song Lyrics in Tamil


ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
நீ யாரோ நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
நீ யாரோ நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

—BGM—

ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

ஆண் : பூவின் மகளே நீ யாரோ…
புன்னகை நிலவே நீ யாரோ…
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ…

ஆண் : என்னை நீ பார்க்கவில்லை…
என் உயிர் நொந்ததடி…
பெண்ணே நீ போன வழியில்…
என் உயிர் போனதடி…

ஆண் : எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…

—BGM—

ஆண் : மின்னலை கண்டு கண்கள் மூடி…
கண்களை திறந்தேன் காணவில்லை…
மின்னல் ஒளியை கையில் கொள்ள…
ஐயோ ஐயோ வசதியில்லை…

—BGM—

ஆண் : என்னை நோக்கி சிந்திய மழைத்துளி…
எங்கே விழுந்தது தெரியவில்லை…
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ…
இதுவரை ஏதும் தகவலில்லை…

ஆண் : அழகே உன்னை காணாமல்…
அன்னம் தண்ணீர் தொட மாட்டேன்…
ஆகாயத்தின் மறு பக்கம்…
சென்றால் கூட விடமாட்டேன்…
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்…
கடவுளை தொழ மாட்டேன்…

—BGM—

ஆண் : எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…

ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

—BGM—

ஆண் : பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால்…
லவ் யூ லவ் யூ சொல்வாயா…
பாவம் ஐயோ பைத்தியம் என்று…
பார்வையினாலே கொல்வாயா…

—BGM—

ஆண் : உலகின் விளிம்பில் நீ இருந்தாலும்…
அங்கும் வருவேன் அறிவாயா…
உயிரை திருகி கையில் தந்தால்…
ஓகே என்று சொல்வாயா…

ஆண் : ஆமாம் என்று சொல்லிவிட்டால்…
ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்…
இல்லை என்று சொல்லிவிட்டால்…
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்…
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும்…
மீண்டும் காதலிப்பேன்…

—BGM—

ஆண் : எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…

ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

ஆண் : பூவின் மகளே நீ யாரோ…
புன்னகை நிலவே நீ யாரோ…
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ…

—BGM—


Notes : Apple Penne Neeyaaro Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆப்பிள் பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading