மொட்டுகளே மொட்டுகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & ஹரிஹரன் பரத்வாஜ்ரோஜா கூட்டம்

Mottugale Mottugale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
கண்மணியாய் தூங்குகிறாள்…
காலையில் மலருங்கள்…

ஆண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலி துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

பெண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
காதலன்தான் தூங்குகிறான்…
காலையில் மலருங்கள்…

பெண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலன் துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

—BGM—

பெண் : நீ ஒரு பூ கொடுத்தால்…
அதை மார்புக்குள் சூடுகிறேன்…
வாடிய பூக்களையும்…
பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்…

ஆண் : உன்வீட்டுத் தோட்டம் கண்டு…
இரவில் வந்து சேர்வேன்…
ரோஜாக்களை விட்டு விட்டு…
முட்கள் திருடிப்போவேன்…

பெண் : நீ ஆகட்டும் என்று சொல்லி விடு…
உன் சட்டையில் பூவாய் பூப்பேன்…

ஆண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
கண்மணியாய் தூங்குகிறாள்…
காலையில் மலருங்கள்…

ஆண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலி துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

—BGM—

ஆண் : காதலி மூச்சுவிடும்…
காற்றையும் சேகரிப்பேன்…
காதலி மிச்சம் வைக்கும்…
தேனீர் தீர்த்தம் என்பேன்…

பெண் : கடற் கரை மணலில் நமது…
பேர்கள் எழுதி பார்ப்பேன்…
அலை வந்து அள்ளிச் செல்ல…
கடலை கொல்ல பார்ப்பேன்…

ஆண் : உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்…
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்… பார்ப்பேன்…

பெண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
காதலன்தான் தூங்குகிறான்…
காலையில் மலருங்கள்…

பெண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலன் துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

—BGM—


Notes : Mottugale Mottugale Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Vairamuthu. மொட்டுகளே மொட்டுகளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading