அப்பப்பா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாலிங்கம்ஜி. வி. பிரகாஷ் குமார் & ஸ்ரேயா கோஷல்ஜி. வி. பிரகாஷ் குமார்கொம்பன்

Appappa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…
முத்தத்தில் பத்து போடு தேச்சு… ஓஹோ…
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு…

பெண் : பத்தியத்த முறிக்காத உங்க கையி…
முப்பாலில் மூணாம் பால் சோ்த்து வையி…
அப்பாவா நீயாகும் சேட்டை செய்யி…

ஆண் : வெக்கத்த பக்கம் வந்து பாத்து… ஓஹோ…
வீராப்பு மட்டு பட்டு போச்சு…
மல்லி பூ கூந்தல் மோந்து பாத்து… ஓஹோ…
மச்சமும் நட்சத்திரம் ஆச்சு…

ஆண் : தப்பு தண்டா செய்யாத வீரன்தான்டி…
உன்கிட்ட நடப்பேனே தப்பாதான்டி…
ஒப்பேத்த மாட்டேண்டி கிட்ட வாடி…

—BGM—

பெண் : ஓ… வீட்டுல மத்தவங்க பாக்காதப்போ சீண்டுவ…
பார்த்துட்டா சமாளிக்க ஏதோ ஒன்ன நோண்டுவ…
பார்ப்பேன் அப்ப பார்ப்பேன் அந்த அசட்டு சிரிப்பதான்…
ஆனா எதிர் பார்ப்பேன் அந்த திருட்டு தனத்ததான்…

ஆண் : ரொம்ப தான் அக்கறையா வேலை எல்லாம் பாக்குற…
அம்புட்டும் என்ன பார்க்க வைக்க தானே செய்யுற…
உங்க கண்ணு மட்டும் தாண்டி வேற எங்கோ பாா்க்குது…
ஆனா ஒடம்பெல்லாம் என்னை கண்ணால் தாக்குது…

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…

—BGM—

ஆண் : யே சொம்புல தண்ணி மொண்டு மேலு கூச ஊத்துற…
நெஞ்சுல சாச்சு வச்சு முந்தானையில் துவட்டுற…
போதும் இது போதும் பஞ்சு பஞ்சா பறக்குறேன்…
நெஞ்சாங் குளிக்குள்ள வந்து நீச்ச அடிக்குறேன்

பெண் : செவ்வந்தி நெத்தி மேல பச்ச குத்தி காட்டுனேன்…
வெள்ளந்தி நெஞ்சுக்காரா உன்னை வண்ணம் தீட்டுவேன்…
நூறு ஜென்மம் போதாதையா வேண்டி கெஞ்சுவேன்…
பாசம் அன்பில் தானே பெத்த தாய மிஞ்சுவேன்…

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…
முத்தத்தில் பத்து போடு தேச்சு… ஓஹோ…
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு…

பெண் : பத்தியத்த முறிக்காத உங்க கையி…
முப்பாலில் மூணாம் பால் சோ்த்து வையி…
அப்பாவா நீயாகும் சேட்டை செய்யி…

ஆண் : வெக்கத்த பக்கம் வந்து பாத்து… ஓஹோ…
வீராப்பு மட்டு பட்டு போச்சு…

—BGM—


Notes : Appappa Song Lyrics in Tamil. This Song from Komban (2015). Song Lyrics penned by Mahalingam. அப்பப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading