அனுபவம் புதுமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Anubhavam Pudhumai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
லா லா லா லாலா லா லா…

பெண் : அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
லா லா லா லாலா லா லா…

பெண் : அனுபவம் புதுமை…

—BGM—

ஆண் : தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்…
ஆஹா… சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்…
அது கூடாதென்றால் மனம் தாளாதென்றால்…
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றால்…
போதாதென்றால்…

ஆண் : அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…

—BGM—

ஆண் : அனுபவம் புதுமை…

—BGM—

பெண் : கண் என்ன கண் என்று…
அருகினில் அவன் வந்தான்…
ஆஹா… பெண்ணென்ன பெண்ணென்று…
என்னென்ன கதை சொன்னான்…

பெண் : இது மாறாதென்றான்…
இனி நீயே என்றான்…
கண்ணில் பார்வை தந்தான்…
துணை நானே என்றான்…
நாளை என்றான்…

பெண் : அனுபவம் புதுமை…

—BGM—

ஆண் : சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்…
ஆஹா… சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்…

ஆண் : அவள் எங்கே என்றால்…
நான் இங்கே நின்றேன்…
அவள் அங்கே வந்தாள்…
நாங்கள் எங்கோ சென்றோம்…
எங்கோ சென்றோம்…

பெண் : பனி போல் குளிர்ந்தது…
கனி போல் இனித்ததம்மா…
ஆஹா… மழை போல் விழுந்தது…
மலராய் மலர்ந்ததம்மா…

பெண் : ஒரு தூக்கம் இல்லை…
வெறும் ஏக்கம் இல்லை…
பிறர் பார்க்கும் வரை…
எங்கள் பிறவியுமில்லை… பிறவியுமில்லை…

பெண் : அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
லா லா லா லாலா லா லா…
லா லா லா லாலா லா லா…
லா லா லா லாலா லா லா…


Notes : Anubhavam Pudhumai Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. அனுபவம் புதுமை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading