பார்த்துப் பார்த்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஏ. ராஜ்குமார்நீ வருவாய் என

Parthu Parthu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…

ஆண் : தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்…
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்…
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்…
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்…

குழு : நீ வருவாய் என… நீ வருவாய் என…

ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…

—BGM—

ஆண் : கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென…
தினம்தினம் சேகரித்தேன்…
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென…
வாசகனாகிவிட்டேன்…

ஆண் : கவிதை நூலோடு கோலப் புத்தகம்…
உனக்காய் சேமிக்கிறேன்…
கனவில் உன்னோடு என்ன பேசலாம்…
தினமும் யோசிக்கிறேன்…

ஆண் : ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்…
என் வாசல் பார்க்கிறேன்…

குழு : நீ வருவாய் என… நீ வருவாய் என…

ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…

—BGM—

ஆண் : எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்…
நிலவுக்கும் ஜோடியில்லை…
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட…
கவிதைக்கும் கால்களில்லை…

ஆண் : உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம்…
அதிலே நீ யாரடி…
சருகாய் வந்தே நான் காத்திருக்கிறேன்…
எங்கே உன் காலடி…

ஆண் : மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து…
இரு விழிகள் தேய்கிறேன்…

குழு : நீ வருவாய் என நீ வருவாய் என…

ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…

—BGM—

ஆண் : பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…

—BGM—

ஆண் : தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்…
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்…
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்…
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்…

குழு : நீ வருவாய் என நீ வருவாய் என…
நீ வருவாய் என நீ வருவாய் என…


Notes : Parthu Parthu Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Ra. Ravishankar. பார்த்துப் பார்த்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading