அம்மா உன் பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசாதனா சர்கம்இளையராஜாநான் கடவுள்

Amma Un Pillai Naan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அம்மா உன் பிள்ளை நான்…
அறியாததென்னவோ…
உன் பாடல் ஒன்றுதான்…
என் சொந்தம் என்பதோ…

பெண் : என்னை என்றும் காக்கவே…
என்னை என்றும் காக்கவே…
இது ஒன்று போதுமா அம்மா… ம்ம்…

பெண் : அம்மா உன் பிள்ளை நான்…
அறியாததென்னவோ…

—BGM—

பெண் : காட்டோரம் ஓடும் நீரே நதியானதே…
காட்டோரம் ஓடும் நீரே நதியானதே…
ரோட்டோரமாய் வாழ்வு விதியானதே…
விதியென்னும் எழுத்தெல்லாம்…
விழிநீரில் அழியும் ஓர் நேரம்…

பெண் : அம்மா உன் பிள்ளை நான்…
அறியாததென்னவோ…

—BGM—

பெண் : காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே…
கரையில்லா துயருக்கோர்…
கரைபோட்டு காட்டவா நீயே…

பெண் : அம்மா உன் பிள்ளை நான்…
அறியாததென்னவோ…

—BGM—

பெண் : ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே…
ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே…
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே…
பெண்களை சிலையிலே…
தொழுகின்ற உலகமே ஏன் சொல்லு…

பெண் : அம்மா உன் பிள்ளை நான்…
அறியாததென்னவோ…
என்னை என்றும் காக்கவே…
என்னை என்றும் காக்கவே…
இது ஒன்று போதுமா அம்மா… ம்ம்ம்…

பெண் : அம்மா உன் பிள்ளை நான்…
அறியாததென்னவோ…

—BGM—


Notes : Amma Un Pillai Naan Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Vaali. அம்மா உன் பிள்ளை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading