அம்மா என்றாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Amma Endrale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…
ஆரோ ஆரிரோ…
அதை பாடவும் உன்னால் முடியாதோ…

ஆண் : யாரோ யார் யாரோ என்றே…
தாயும் சேய்யும் இருப்பாரோ… ஓ…
விடையே இல்லாமல்…
இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…

—BGM—

ஆண் : தெய்வமும் நீயும் உண்மைகள் பேச…
ஊமைகள்தானோ சொல் உன் வாழ்வில்…
நீ கொண்ட சோகம் நீ கொண்ட மௌனம்…
தீர்ந்திடும் நாள் வருமே…

ஆண் : அந்தோ உன் தலை மேலே பேரிடிபோல…
காலனும் வந்தானே…
அந்த காலனின் பேரை கேட்கிறபோதோ…
உன் மகன் பேர்தானே…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…

—BGM—

ஆண் : சேய் குரல் கேட்டால் தாய் உயிரோடு…
ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட…
அன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில்…
யாரும் இல்லா வெறுமை…

ஆண் : மண்ணில் நுண் உயிர்கூட தன்னுயிர் தந்த…
தாய் உயிர் தேடாதா…
அம்மா உன் மடியோடு என் தலை சாய்ந்தால்…
மாய்வதில் ஓர் சுகமே…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…
ஆரோ ஆரிரோ…
அதை பாடவும் உன்னால் முடியாதோ…


Notes : Amma Endrale Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Pa. Vijay. அம்மா என்றாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading