அலைபாயும் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஜய் பிரகாஷ் & ஆண்ட்ரியா ஜெரெமையாஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Alaipaayum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அலைபாயும் பார்வை ஒன்று…
கொலுசில்லா கால்கள் ரெண்டு…
உராசாத தோல்கள் கொண்டு…
என்னை கொல்லுதே…

ஆண் : முதல்நாளில் ஏதோ ஏதோ…
பேச பேச தோன்றும்…
முடியாமல் திக்கி திக்கி…
வார்த்தை போய் வரும்…

ஆண் : முகமெல்லாம் வேர்வை மொட்டு…
எட்டி எட்டி பார்க்கும்…
முதல் காதல் என்றால் இதுதான் நேரும்…

—BGM—

ஆண் : முன்பின்னல் உன்போல் ஒரு…
பெண்ணோடு ஒன்றாகவே…
எங்கேயும் சென்றேனிலை அறிவாய்…

ஆண் : கண் பார்த்து நான் பேசனும்…
கை கோர்த்து உலவனும்…
என் தோளில் நீ சாயனும் அழகே…

ஆண் : அணியும் உடையில் தடவும் வாசம்…
என்மேல் படும் தூரம்தான் என்று…
உனக்கும் மனதில் சலனம் வருதா…
வரனும் எனில் நானும் என்ன செய்யனும்…

—BGM—

ஆண் : கண் மேலே கலாபமோ…
என் மேலே உலாவுமோ…
ஏன் இந்த பெண் மோகமோ எனக்கு…

ஆண் : நீ நிற்கும் தராசிலே…
நான் வைத்தேன் நிலாவினை…
நீ கீழே நிலா அது மேலே…

ஆண் : சிரிக்கும் அழகில் சிதறும் இதயம்…
கனகாம்பரமாக காற்றில் ஆடும் கை…
புருவம் இரண்டும் வளையும் இடத்தில்…
புதையல் இருந்தாலும் பொய் இல்லை…

—BGM—

ஆண் : அலைபாயும் பார்வை ஒன்று…
கொலுசில்லா கால்கள் ரெண்டு…
உராசாத தோல்கள் கொண்டு…
என்னை கொல்லுதே…

ஆண் : முதல்நாளில் ஏதோ ஏதோ…
பேச பேச தோன்றும்…
முடியாமல் திக்கி திக்கி…
வார்த்தை போய் வரும்…

ஆண் : முகமெல்லாம் வேர்வை மொட்டு…
எட்டி எட்டி பார்க்கும்…
முதல் காதல் என்றால் இதுதான் நேரும்…

—BGM—


Notes : Alaipaayum Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. அலைபாயும் பார்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading