பெண்ணே பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஜி.வி. பிரகாஷ் குமார், பவதாரிணி & யாழினிஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Penne Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…

ஆண் : நீ சொல்லாததால் மொழி இல்லை…
நீ செல்லாததால் வழி இல்லை…
நீ பாராததால் ஒளி இல்லை…
நீ தாராததால் நிழல் இல்லை…

ஆண் : உயிர் போனாலும் போகட்டும் இப்போதே…
பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…

BGM

பெண் : நானும் உன்னை காணும் வரை…
என் வாழ்வில் ஏதோ குறை…
உன்னை கண்ட அந்நாள் முதல்…
அன்றாடம் மூன்றாம் பிறை…

பெண் : கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க…
நான் கேட்டேனே அன்பின் சிறை…
பார்க்கும்போதே பாவை சிலை…
காணாமல் போன கதை…

ஆண் & பெண் : என்னை வா என்றாய் நீ…
எட்டி ஓடோடி பக்கத்தில் வந்தேன்…
கண்கள் பொய் சொன்னதால்…
கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன்…

ஆண் : சாலை ஓரத்தில் பூத்தென்றல் ரூபத்தில்…
நீ வந்தாய் நான்தானே புல்லாங்குழல்…

BGM

ஆண் : ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…

BGM

ஆண் : காற்றை தூதாக நான் விட…
கண்ணே உன் கூந்தல் கோதி பாராதோ…
உன் கண்ணின் மை பூசி நீவிட…
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ…

ஆண் & பெண் : முன்னும் முன்னூறு ஆண்டுகள்…
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம்…
ஏங்கி நான் பெற்ற என் வரம்…
ஹையோ இப்போது யாரிடம்…

ஆண் & பெண் : உன்னை பாராது முத்தம் தாராது…
இனி தூங்காது என் கண்களே…

ஆண் : பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…

ஆண் : நீ சொல்லாததால் மொழி இல்லை…
நீ செல்லாததால் வழி இல்லை…
நீ பாராததால் ஒளி இல்லை…
நீ தாராததால் நிழல் இல்லை…

ஆண் : உயிர் போனாலும் போகட்டும் இப்போதே…
பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை…

BGM


Notes : Penne Penne Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading