அக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்டீபன் சகரியாஹாரிஸ் ஜெயராஜ்Brother

Akka Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்ணா நீ கண்ணுறங்கு…

—BGM—

பெண் : தாலாட்ட நீ உறங்கு…

—BGM—

ஆண் : ஆரோ ஆராரோ அக்கா உன் பேரோ…
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ…
பாலை மண் மீது பாயும் பன்னீரோ…
எனக்காகத்தான் இங்கு வந்தாயோ…

ஆண் : அடங்காத என்னை அடைக்காத்த தொன்னை…
சிதறாமல் ஆளாக்கினாயே…
சில ஆண்டு முன்னே பிறந்தாலும் பெண்ணே…
உறவென்று சொன்னால் நீ தாயே…

ஆண் : ஆரோ ஆராரோ அக்கா உன் பேரோ…
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ…
பாலை மண் மீது பாயும் பன்னீரோ…
எனக்காகத்தான் இங்கு வந்தாயோ…

—BGM—

பெண் : கண்ணா நீ கண்ணுறங்கு…

—BGM—

பெண் : தாலாட்ட நீ உறங்கு…

ஆண் : முதல் அடி எடுத்தேன் வைக்க…
தளிர் நடை தடுத்தே பொய்க்க…
நிலத்தை அடித்து நீ கடிந்தாய்…

ஆண் : விழி என எனை நீ வரித்தாய்…
இமைகளை குடையாய் விரித்தாய்…
உறக்கம் தொலைத்தெனை வளர்த்தாய்…

ஆண் : அலை போல நில்லாமல் ஆடிய உன் தோள்கள்…
ஆனந்த ஊஞ்சல்களாகும்…
மறவாத என் நெஞ்சம் மல்லிகை பூ கொஞ்சும்…
வாசத்தை தேடும்…

ஆண் : ஆரோ ஆராரோ அக்கா உன் பேரோ…
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ…

பெண் & ஆண் : பாலை மண் மீது பாயும் பன்னீரோ…
ஆண் : எனக்காகத்தான் இங்கு வந்தாயோ…

—BGM—

ஆண் : ஓஓ… தவறுகள் தெரிந்தே செய்தும்…
எனக்கென இருந்தாய் என்றும்…
நீதான் தவம் வரம் இரண்டும்…

ஆண் : அடி உதை கிடைக்கும் என்றால்…
இழுத்தென்னை மறைப்பாய் பின்னால்…
கவசம் நிரந்தரம் எனக்கும்…

ஆண் : புயல் காற்றில் நான் நின்றால்…
பூந்தென்றல் நீ ஆவாய்…
புன்னகையால் என்னை வெல்வாய்…

ஆண் : நதி வெள்ளம் நான் என்றால்…
நாணல்கள் நீ ஆவாய்…
நான் பொங்கி போகாமல் காப்பாய்…

ஆண் : அம்மா கண்ணம்மா…
பெண் : கண்ணம்மா…
ஆண் : கண்ணே நீயம்மா…
பெண் : நீயம்மா…
ஆண் : உனையன்றி எனக்கிங்கே யாரம்மா…

ஆண் : பெண்ணில் பொன்னம்மா…
பெண் : பொன்னம்மா…
ஆண் : உள்ளம் பூவம்மா…
பெண் : பூவம்மா…
ஆண் : நடமாடும் மண் தெய்வம் நீயம்மா…

ஆண் : மடி மீது என்னை புலராத ஏந்தி…
மகன் போல ஆளாக்கி தந்தாய்…
வளர்ந்தாலும் என்னை சிறுபிள்ளை என்னும்…
கதை சொல்லி காப்பாற்றி வந்தாய்…

—BGM—

பெண் : கண்ணம்மா… நீயம்மா…
ஆராரிராரோ… ம்ம்ம்…
பொன்னம்மா… பூவம்மா…
தாலாலே தாலாலேலோ…


Notes : Akka Song Lyrics in Tamil. This Song from Brother (2024). Song Lyrics penned by Thamarai. அக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading