அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

—BGM—

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

—BGM—

ஆண் : இடி ஒலி கேட்கும் போதிலும்…
வெடி ஒலி கேட்கும் போதிலும்…
காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே…

ஆண் : பூக்கள் மலரும் ஓசையில்…
புடவையின் சர சர ஓசையில்…
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே…

ஆண் : ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா…
இறை தேடும் மிருகம்தான் என்னை திண்ணுமா…
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்…
கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

—BGM—

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

—BGM—

ஆண் : காதல் மிருகம் என்பது…
ரத்தம் சதையா கேட்குது…
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது…

ஆண் : மீண்டும் மிருகம் தூங்கவே…
காடா மலையா கேட்குது…
இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது…

ஆண் : மிருகம் தவிக்குதே வழி சொல்லவா…
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா…

ஆண் : மடி தாங்கி கொடுக்க…
மெல்ல தடவி கொடுக்க…
அது தூங்கி போகும் அல்லவா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

—BGM—

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

—BGM—


Notes : Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading