அட மூன்றெழுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி & கார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்பார்த்தாலே பரவசம்

Ada Moondrezhuthu Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஹே குருவே குருவே குருவே குருவே…
ஹே குருவே குருவே சிஷ்யா…

—BGM—

பெண் : அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

—BGM—

பெண் : அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

பெண் : அது உன்னை என்னை சுட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

ஆண் : போட்டு பின்னுதடி என்ன தின்னுதடி…
அது என்ன வார்த்தை சொல்லுங்கோ குருவா…

பெண் : தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு…
அத கத்துக்க வேணும் ரொம்ப சுளுவா…

ஆண் : குரு தட்சனை என்னான்னு சொல்லணும் நீங்க…

பெண் : அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

பெண் : அது உன்னை என்னை சுட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

—BGM—

பெண் : கம்பன் மகனை தின்ற வார்த்தை…
தெய்வீக வார்த்தை…
அது பௌர்ணமி நிலவையும் நெருப்பென காட்டும்…
காவிய வார்த்தை…

ஆண் : நிலவோடு நெருப்பை வைத்தாய்…
அது என்ன சேர்க்கை…
அதை நீயும் இங்கே சொல்லாவிட்டால்…
எனக்கேது வாழ்க்கை…

பெண் : நினைத்தாலே நெஞ்சுக்குள்ளே வலிக்கின்ற வார்த்தை…
நெடுங்காலம் நோம்பிருந்தால் பழிக்கின்ற வார்த்தை…

ஆண் : சொல்லுங்கோ குருவே…
சொல்லுங்கோ குருவே…
சுருண்டு சுண்ணாம்பாக நிக்கிறேன்…

பெண் : அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…
குழு : ஹே குருவே…

ஆண் : உன் பேரை சொல்லி…
நூறு தேங்காய் உடைகிறேன் குருவே…
சொல்லு அந்த கெட்ட வார்த்தை…
குழு : ஹே குருவே…

பெண் : தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு…
அத கத்துக்க வேணும் ரொம்ப சுளுவா…
தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு…
அத கத்துக்க வேணும் ரொம்ப சுளுவா…

ஆண் : குரு தட்சனை என்னான்னு சொல்லணும் நீங்க…

—BGM—

பெண் : உன்னை எந்தன் பின்னால் என்றும்…
சுற்ற வைக்கும் வார்த்தை…
புது கவிஞருகெல்லாம் பைத்தியம் தன்னை…
முற்றவைக்கும் வார்த்தை…

ஆண் : அது என்ன சொக்குபொடி…
மந்திர வார்த்தை…
நான் வாழ்வேமாயம் பாடிக்கொண்டு…
தாடிவைக்கும் முன்னே சொல் அந்த வார்த்தை…

பெண் : ஆப்பிள் பழம் ஆரம்பித்த அதிசய வார்த்தை…
ஆதாம் ஏவாள் பேசி கொண்ட அழகிய வார்த்தை…

ஆண் : சொல்லுங்கோ குருவே…
பெண் : சொல்லுறேன் சிசியா…
அலையாதே… அலையாதே…

ஆண் : உன் பேரை சொல்லி…
நூறு தேங்காய் உடைகிறேன் குருவே…
சொல்லு அந்த கெட்ட வார்த்தை…

ஆண் : உன் துணிகளை பத்து மாசம்…
துவைகிறேன் குருவே…
சொல்லு அந்த நல்ல வார்த்தை…

பெண் : நான் சொல்லமாட்டான்…
அத சொல்லமாட்டான்…
நீ சோப்பு போட்டா கூட சிஷ்யா…

பெண் : கா-வில் ஆரம்பிக்கும்…
ல்-லில் போயி நிக்கும்…
கண்டுபிடி கண்டுபிடி சிஷ்யா…


Notes : Ada Moondrezhuthu Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vaali. அட மூன்றெழுத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading