அச்சோ பதிகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மாணிக்கவாசகர்சுப்பிரமணியம், முத்துக்குமார், பழனி கே வெங்கடேசன் & பழனி சண்முகசுந்தரம்Unknownதிருவாசகம்

Achopathigam Song Lyrics in Tamil


BGM

குழு : முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை…
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்…
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைகுழுட…
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…

குழு : நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனை…
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்…
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு…
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே…

குழு : பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே…
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளி…
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்…
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…

குழு : மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை…
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்…
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்…
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே…

குழு : பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு…
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்…
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று…
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே…

குழு : வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கி…
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனை…
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து…
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…

குழு : தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனை…
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி…
உய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை…
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…

குழு : சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறி…
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை…
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்…
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…

குழு : செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை…
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்…
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த…
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…

BGM


Notes : Achopathigam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Manikkavacakar. அச்சோ பதிகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading