| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விஜய் ஸ்ரீஜி | இர்வின் விக்டோரியா | ரஷாந்த் அர்வின் | ஹரா |
Aasai Devathai Song Lyrics in Tamil
ஆண் : மருதாணி மழை வண்ணத்தில் மனம் தள்ளாடும்…
தேவதையை கையில் தூக்கையில் மனம் கொண்டாடும்…
பெண் தெய்வம் மழலை மொழியிலே…
என் வாழ்வை தொடங்கி வைக்கிறாய்…
உன்னால ரெட்டை உசுரு வாழ துடிக்குதே…
ஆண் : பெத்தெடுத்த ஆசை தெய்வத்த…
ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட…
நா பெத்தெடுத்த ஆசை தெய்வத்த…
இந்த ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட…
—BGM—
ஆண் : தாயாய் உன்னை கண்டேன்…
பேசும் தெய்வம் பார்த்தேன்…
எந்தன் வாழ்வு நீயடி செல்ல குட்டி…
ஆண் : காலம் மாறி வரும்…
வருடங்கள் ஓடி வரும்…
என்றும் குழந்தை நீயே…
ஆண் : விழா கோலமாய் என் வாழ்க்கை மாறுதே…
நீ என்னருகில் இருந்தால் அது போதுமே…
ஆண் : என் தங்க தாரகை அவள் மின்னும் தூரிகை…
உன்னை சுற்றி என்னுலகம் தினம் சுழழுதே…
உன்னால ரெட்டை உசுரு வாழ துடிக்குதே…
ஆண் : பெத்தெடுத்த ஆசை தெய்வத்த…
ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட…
நான் பெத்தெடுத்த ஆசை தெய்வத்த…
இந்த ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட…
—BGM—
Notes : Aasai Devathai Song Lyrics in Tamil. This Song from Haraa (2022). Song Lyrics penned by Vijay SriG. ஆசை தேவதை பாடல் வரிகள்.

