| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காளிதாசன் | மனோ & எஸ். ஜானகி | தேவா | மனசுக்கேத்த மகராசா |
Aarengum Thaanuranga Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே ராசா…
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா…
ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே மானே…
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே…
—BGM—
பெண் : சாட எழுதி வச்ச சாந்து சுவத்தில் எல்லாம்…
ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு…
சாட எழுதி வச்ச சாந்து சுவத்தில் எல்லாம்…
ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு…
பெண் : தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம்…
தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம்…
வாழ வைச்சு பாக்கலயே சேர்ந்திருந்த ஊரு சனம்…
பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே ராசா…
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா…
—BGM—
பெண் : மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால…
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால…
யார் அடிச்சா சொல்லி அழு…
நீர் அடிச்சா நீர் விலகும்…
—BGM—
ஆண் : காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தேதான் போகுமுன்னு…
போத்தி வைச்ச ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில…
காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தேதான் போகுமுன்னு…
போத்தி வைச்ச ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில…
ஆண் : சங்குக்குள்ள அடங்கிடுமா கங்கை நதி நீரு…
சங்குக்குள்ள அடங்கிடுமா கங்கை நதி நீரு…
சந்திரனும் களங்கமுன்னு சொன்னது தான் நம்மூரு…
ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே மானே…
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே…
பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே ராசா…
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா…
Notes : Aarengum Thaanuranga Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. ஆறெங்கும் தானுறங்க பாடல் வரிகள்.