ஒரே முறைதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலாகே.வி. மகாதேவன்தனிப்பிறவி

Ore Muraithan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…

பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…

பெண் : ஒரே முறைதான்…

—BGM—

பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே…
மழை என விழுந்தாயே…

ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே…
நீ எனை அழைத்தாயே…

பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே…
மழை என விழுந்தாயே…

ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே…
நீ எனை அழைத்தாயே…

பெண் : வசந்த காலப் பூக்களின் மேலே…
வண்டென அமர்ந்தாயே…

ஆண் : அமர்ந்த வண்டு பறந்து விடாமல்…
ஆசையில் அணைத்தாயே… ஓஹோஹோ…

ஆண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…

ஆண் : ஒரே முறைதான்…

—BGM—

பெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்…
காதல் சுவையாகும்…

ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்…
கல்லும் மலராகும்…

பெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்…
காதல் சுவையாகும்…

ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்…
கல்லும் மலராகும்…

பெண் : பொல்லா மனதில் ஆசை புகுந்தால்…
பொழுதும் பகையாகும்…

ஆண் : புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்…
புதுப்புது இசையாகும்…

பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…

ஆண் : ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…

ஆண் & பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…

—BGM—


Notes : Ore Muraithan Song Lyrics in Tamil. This Song from Thanipiravi (1966). Song Lyrics penned by Kannadasan. ஒரே முறைதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading