என்ன மறந்த பொழுதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.எஸ். சித்ரா & மனோஇளையராஜாபாண்டித்துரை

Enna Marantha Song Lyrics in Tamil


பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…

BGM

பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…

பெண் : கண்ணு உறங்கும் பொழுதும்…
உன் எண்ணம் உறங்கவில்லையே…
என் ராஜாதி ராஜன் இருந்தா…
நான் வேறேதும் கேக்கவில்லையே…
என் மாமா என் பக்கம் இருந்தா…
இனி வேறேதும் தேவை இல்லையே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…

BGM

பெண் : உன் மேல ஆச வச்சு…
உள்ளுக்குள்ள பாசம் வச்சு…
ஆளான அன்னக்கிளி நான்…

பெண் : பூ மால கோத்து வச்சு…
போட ஒரு வேள வச்சு…
போடாம காத்திருக்கேன் நான்…

பெண் : வேண்டாத சாமி இல்ல…
வேற வழி தோணவில்ல…
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்…

பெண் : போடாத வேலி ஒண்ணு…
போட்டு வச்ச நேரம் ஒண்ணு…
பாடாத சோகம் ஒண்ணு…
பாடி வரும் பொண்ணு ஒண்ணு…

பெண் : என் ராகம் கேட்கவில்லையா…
மாமா இன்று ஏதாச்சும் வார்த்த சொல்லய்யா…

பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…

BGM

பெண் : பொன்னான கூண்டுக்குள்ள…
பூட்டி வச்ச பச்சக் கிளி…
கண்ணீரு விட்டுக் கலங்கும்… ம்ம்ம்…

பெண் : கண்ணான மாமன் எண்ணம்…
காட்டாறு போல வந்து…
எப்போதும் தொட்டு இழுக்கும்… ம்ம்ம்…

பெண் : உன்ன எண்ணி நித்தம் நித்தம்…
ஓடுதையா பாட்டுச் சத்தம்…
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்…

பெண் : ஒத்தையில பூங்கொலுசு தத்தளிச்சு தாளம் தட்ட…
மெத்தையில செண்பகப்பூ பாட்டுக்குள்ள சோகம் தட்ட…
பாடாம பாடும் குயில் நான்…
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்…

ஆண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…
என் ராசாத்தி பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவை இல்லையே…

பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…


Notes : Enna Marantha Song Lyrics in Tamil. This Song from Pandithurai (1992). Song Lyrics penned by Gangai Amaren. என்ன மறந்த பொழுதும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading