மாசி மாசந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசங்கர் கணேஷ்ஊர்க்காவலன்

Maasi Maasam Dhan Song Lyrics in Tamil


பெண் : ஓடுகிற மேகங்களா…
ஓடை தண்ணி மீனுங்களா…
கன்னிதான் கல்யாணம் கட்டுறா…
ஊரெல்லாம் தம்பட்டம் கொட்டுறா…

பெண் : மச்சானுக்கும் மணப்பொண்ணுக்கும்…
மொய் எழுத வாரீயலா…

BGM

பெண் : மாசி மாசந்தான்…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…
மேள தாளந்தான்…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

பெண் : மாசி மாசந்தான்…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…
மேள தாளந்தான்…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

ஆண் : மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்…
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்…

பெண் : பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க…
பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க…
வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்…

ஆண் : மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்…
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்…

BGM

ஆண் : பொட்டோடு பூச்சூடி பொஞ்சாதி வந்தாச்சு…
பெண் : எம் புருசன் நீயாச்சு…
எம் மனசு போலாச்சு…

ஆண் : நேரங்காலம் எல்லாமே இப்பத்தானே தோதாச்சு…
பெண் : சொந்தமுன்னு ஆயாச்சு…
சோகமெல்லாம் போயாச்சு…

ஆண் : பூமுடிச்ச மானே பசுந்தேனே சுகந்தான்…

பெண் : தொட்டு தொட்டு…
ஆண் : ஹோய்…
பெண் : வரும் பந்தம் இது…
ஆண் : அட தொத்திக் கொண்டு…
வந்த சொந்தம் இது…
பெண் : ஆயிரம் காலங்கள் கூடியது…

ஆண் : மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்…
பெண் : மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்…

ஆண் : பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க…
பெண் : பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க…
ஆண் : வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்…

பெண் : மாசி மாசந்தான்…
ஆண் : கெட்டி மேள தாளந்தான்…
பெண் : மாத்து மாலைதான்…
ஆண் : வந்து கூடும் வேளைதான்…

BGM

பெண் : ராசாவே உன்னாலே ராத்தூக்கம் போயாச்சு…
ஆண் : பொன்மானே உன்னாலே பூங்காத்தும் தீயாச்சு…

பெண் : அஞ்சு வகை பூபாணம் மன்மதனும் போட்டாச்சு…
ஆண் : அந்திப் பகல் இனிமேலே கட்டிலறை பாத்தாச்சு…
பெண் : நித்தம் இது போலே மடி மேலே விழவா…

ஆண் : எந்நாளுமே…
பெண் : ஹா…
ஆண் : இனி உன்னோடுதான்…
பெண் : என் ஜீவனும்…
ஆண் : ஹாஹா…
பெண் : உன் பின்னோடுதான்
ஆண் : நாளொரு நாடகம் ஆடிடத் தான்…

பெண் : மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்…
ஆண் : மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்…

பெண் : ஹோ… பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க…
ஆண் : பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க…
பெண் : வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்…

பெண் : மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்…
மாத்து மாலை தான் வந்து கூடும் வேளைதான்…


Notes : Maasi Maasam Dhan Song Lyrics in Tamil. This Song from Oorkavalan (1987). Song Lyrics penned by Vaali. மாசி மாசந்தான் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top