பூவே முதல் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஷ் ராகவேந்திராதேவாகாதல் கிறுக்கன்

Poove Mudhal Poove Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…
காக்கை சிறு கூட்டில் ஒரு மின்மினி உனக்காக…
வானம் உடைந்தாலும் ஒரு விண்மீன் உனக்காக…
கண்களின் இமை ஓரம் துளி கண்ணீர் உனக்காக…

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…

—BGM—

ஆண் : மணல்வெளியின் ஒரு வீட்டை கட்டி வைத்தேன் உனக்காக…
மரபாச்சின் பொம்மையினை படம் பிடித்தேன் உனக்காக…
ஜோசியக் கிளி நீயடி என் ஜாதகம் உனக்காக…
பிள்ளையார் சுழி நீயடி என் கடிதங்கள் உனக்காக…
கூந்தலில் நான் வாழ்ந்திட தினம் பூப்பேன் உனக்காக…

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…

—BGM—

ஆண் : கடல் நீரை தூர் எடுத்து குளிக்க வைப்பேன் உனக்காக…
வானவில்லை தோல்லுரித்து சேலை நெய்வேன் உனக்காக…
பூஜியம் போல் பிறை நில அதில் வலையல்கள் உனக்காக…
மின்னலில் சிறு கீற்றினை இரு மெட்டிகள் உனக்காக…
என் உடல் வெறும் கூடுதான் உயிர் உள்ளது உனக்காக…

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…
காக்கை சிறு கூட்டில் ஒரு மின்மினி உனக்காக…
வானம் உடைந்தாலும் ஒரு விண்மீன் உனக்காக…
கண்களின் இமை ஓரம் துளி கண்ணீர் உனக்காக…

ஆண் : பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…

—BGM—

Notes : Poove Mudhal Poove Song Lyrics in Tamil. This Song from Kadhal Kirukkan (2003). Song Lyrics penned by Kabilan. பூவே முதல் பூவே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading