ஆலோலம் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாசிறையில் பூத்த சின்ன மலர்

Aalolam Paadum Song Lyrics in Tamil


ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…

—BGM—

ஆண் : ஆகாயம் தேடும் திங்களே…

—BGM—

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…

ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து…
வண்ண வண்ணப் பூ முடிக்க வா… ஆ…
சின்னச் சின்ன கன்னங்களில்…
உண்ணுகின்ற தேனெடுத்து வா… ஆ…

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…

—BGM—

ஆண் : உச்சி வெயில் சூடு பட்டு…
வங்கக்கடல் காய்வதில்லை…
வீசும் புயல் காற்றடித்து…
வெள்ளி மலை சாய்வதில்லை…

ஆண் : சந்திரனைப் போல இங்கு…
சூரியனும் தேய்வதில்லை…
மானிடரைப் போல இங்கு…
காதல் என்றும் மாய்வதில்லை…

ஆண் : நேச மனம் சேர்ந்திருக்க…
காசு பணம் கேட்குமா…
பேசுகின்ற பேதம் எல்லாம்…
பாசங்களை தாக்குமா…

ஆண் : வாழலாம் கூட வா…
வாழலாம் கூட வா…
நாளெலாம் நான் சூடும் பூவே…

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…

—BGM—

பெண் : உன்னை ஒரு நாள் மறந்து…
என் மனது வாழ்ந்ததில்லை…
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம்…
உன்னை அன்றி வேறு இல்லை…

பெண் : பொன்னை அள்ளி நான் கொடுக்க…
என்னிடத்தில் ஏதும் இல்லை…
என்னை அள்ளி நான் கொடுத்தேன்…
உன்னுடைய கைகளிலே…

பெண் : கண் இரண்டில் காதல் என்னும்…
கோட்டை கட்டி வாழ்கிறேன்…
ஊரறிய மாலை இட்டு…
உன் மடியில் சேர்கிறேன்…

பெண் : காலமே கூடலாம்…
காலமே கூடலாம்…
மார்பிலே நான் மஞ்சம் போட…

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
பெண் : ஆகாயம் தேடும் திங்களே…

ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து…
வண்ண வண்ணப் பூ முடிக்க வா… ஆ…

பெண் : சின்னச் சின்ன கன்னங்களில்…
உண்ணுகின்ற தேனெடுத்து வா… ஆ…

ஆண் & பெண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…


Notes : Aalolam Paadum Song Lyrics in Tamil. This Song from Sirayil Pootha Chinna Malar (1990). Song Lyrics penned by Vaali. ஆலோலம் பாடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading